சலபு சாலிஹீன்கள் யார்
சலபு சாலிஹீன் யார் ?
**************
கட்டுரை எண் 1415
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
சலஃப் என்ற பதமே வழிகேடு வார்த்தையை போலவும் கீழ்த்தரமான வார்த்தையை போலவும் ஆலீம் போர்வையில் இருக்கும் சிலர்கள் சித்தரித்ததின் விளைவாக மார்க்கத்தை சுயமாக அறியாத மக்கள்
அந்த வார்த்தையை குப்ருக்கு நெருக்கமான வார்த்தையை போல் புரிந்து கொண்டு சலப் என்ற சொல்லை கேள்வி பட்டவுடன் அவர்கள் எதை குருட்டுத்தனமாக மனனம் செய்து வைத்துள்ளார்களோ அதை பிரதிபலிக்கும் நபர்களாகவே மாறிவிட்டனர்
(சலபு சாலிஹீன் )
இறைவேதத்தையும் இறைதூதரின் போதனைகளையும் பின்பற்றி நல்லோர்களாக வாழ்ந்து மறைந்தவர்களுக்கு தான்
சலபு சாலிஹீன் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது
அதில் சாலிஹீன் ( நல்லோர்கள்) என்ற வார்த்தையை துண்டித்து விட்டு வெறுமனே சலபுகள் ( முன்னோர்கள் ) என்ற அரபு வாரத்தையை மட்டும் தனித்து கூறி குர்ஆன் ஹதீசை முற்றிலும் புறக்கணித்து விட்டு முன்னோர்களை பின் தொடரும் கூட்டம் என்ற அவதூறை பரப்பி சுற்றுகின்றனர்
திருக்குர்ஆனில் நபிமார்களை தவிர வேறு எவர்களை எல்லாம் அல்லாஹ் முன்னுதாரணமாக சிறப்பித்து சொல்கிறானோ அவர்கள் அனைவரும் சலபு சாலிஹீன்களே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொன்மொழிகள் மூலம் எவர்கள் சிறப்பிக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் சலபு சாலிஹீன்களே
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும் ( சலப்கள்) அவர்களை
(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான் அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள் அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்
அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள்
இதுவே மகத்தான வெற்றியாகும்
(அல்குர்ஆன் : 9:100)
குர்ஆன் ஹதீஸ் ஒரு சட்டத்தை காட்டியிருக்கும் போது அதற்கு மாற்றமாகவோ அல்லது அதற்கு எதிராகவோ சலபுகள் சொல்லிய சட்டம் தான் தேவை என்று எந்த விசயங்களில் சலபு சாலிஹீன்களை அங்கீகரிப்பவர்கள் நடை முறை படுத்தி வருகிறார்கள் ?
என்ற சிந்தனை தான் சலபு கொள்கைக்கு எதிராக பேசுவோர் சிந்திக்க வேண்டும்
இந்த சிந்தனைக்கு ஏற்றார் போல் ஆதாரங்களை சமர்பிக்க முடியாத சூழலில் சலபுகள் என்று பிறர்களை தவறாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்
இன்று எதை நாம் மார்க்கம் என்று புரிந்து வைத்துள்ளோமோ அந்த மார்க்க சட்டங்கள் அனைத்தும் சலபு சாலிஹீன் மூலமாக தான் சங்கிலி தொடராக பெற்றுள்ளோம் என்பதை உணர வேண்டும்
தவறான செயல்களை எதிர்கிறோம் எனும் பெயரில் சரியான கொள்கையை கற்று தந்த சலபு சாலிஹீன்களை குற்றவாளிகளை போல் சித்தரிக்கும் நயவஞ்ச தன்மையை தவிர்ப்போம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment