மரம்

      !! ஒரு மரம் !!
                         --------------
         J . யாஸீன் இம்தாதி
                       =========
களைப்பான மனிதர்களுக்கு நிழல் தருகிறது

தன்னை சுமக்கும் பூமிக்கு மழை தர காரணமாகவும் அமைகிறது

தனது கிளைகளில் பல உயிர்கள் வாழவும் அதன்  கூடுகளை அமைக்கவும் மனமார  இடம் தருகிறது

காணும் கண்களுக்கு
எழில் தருகிறது

அதன் இருப்பிட வட்டத்தையே அழகு படுத்துகிறது

மனிதனின் சுவை உணர்வுக்கு
கனி தருகிறது

இல்லங்களை அழகாக்கவும் அதன் இறுக்கங்களை மெருகூட்டவும் வலிமை தருகிறது

படுகொலை என்பது மனித உயிர்களில் மட்டும் அல்ல
காரணம் இன்றி மரங்களை முறிப்பதிலும் அதை சிதைக்கும் செயல் மூலமும்
பல நேரம் நிகழ்கிறது

மரம் வளர்க்க நீ பாடு பட வேண்டாம்
ஆனால் வளர்ந்த மரங்களை
நீ ஊனம் ஆக்காது இருந்தாலே போதுமானது

அதுவும் ஒரு வகையில் நன்மையே

عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا اِلاَّ كَانَ مَا اُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا اَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا اَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلاَ يَرْزَؤُهُ اَحَدٌ اِلاَّ كَانَ لَهُ صَدَقَةٌ

எவர் ஒரு முஸ்லிம்
மரம் நடுவாரோ பிறகு அம்மரத்திலிருந்து எவ்வளவு உண்ணப்படுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை மரம் நட்டவருக்குக் கிடைக்கும்

அதிலிருந்து எவ்வளவு திருடப்பட்டதோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை கிடைக்கும் (திருடியதன் மீது சொந்தக்காரருக்குத் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்)
எவ்வளவு அதிலிருந்து பிராணிகள் உண்ணுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்கும்
எவ்வளவு அதிலிருந்து பறவைகள் உண்ணுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்கும்
யார் அந்த மரத்திலிருந்து சிறிதளவு (பழம் போன்றவைகளை) குறைத்தாலும் அந்த மரத்தின் சொந்தக்காரருக்குக் அதைத் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்

என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக  ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

              நூல்  முஸ்லிம்

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்