இயல்பை ரசிப்போம்
இயல்பை ரசிப்போம்
இயலுமானதை சிந்திப்போம்
**************
கட்டுரை எண் 1416
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
எது நடைமுறை வாழ்வுக்கு
ஒத்து வராதோ
எது வாழ்கை ஓட்டத்திற்கு
எதிரானதோ
அவைகளின் மீதே மனிதனின் மனம் ஆசை கொள்ளும்
சினிமா சீரியல் காதல் போன்றவை இதற்கு ஆதாரம்
வாழ்நாளில் சரித்திரத்தை படித்தவனை விட கதைகளை
கற்பனைகளை ரசித்தவனே அதிகம்
நல்ல சொற்களை உரைகளை செவிமடுப்பவனை விட தீய சொற்களை திரை இசை ராகங்களை ரசிப்பவனே அதிகம்
மனிதன் தனது நாவுக்கும் வயிற்றுக்கும் அதன் அளவை விட அதிகமான தீனியை வழங்கி கொண்டுள்ளானே தவிர
அவனது அறிவுக்கு அதன் அளவை விட பல மடங்கு குறைந்த நிலையில் தான் தீவனம் வழங்கி வருகிறான்
கல்வியாளர்களை வசைபாடுவது தியாகிகளை மட்டமாக கொச்சை படுத்துவது அறியாத விசயத்தில் அறிவாளிகள் போல் தங்களை சித்தரித்து ஆனந்தம் அடைவது போன்ற அனைத்தும் இதன் வெளிப்பாடுகளே
எனவே இயல்பை ரசிப்போம்
இயன்றதை ரசிப்போம்
இதன் எதிர் சிந்தனைகளை முற்றிலும் தவிர்ப்போம்
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான் (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ
அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்
எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை
(அல்குர்ஆன் : 2:269)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment