ஈமானை பாதுகாப்போம்
ஈமானை பாதுகாப்போம்
**************
கட்டுரை எண் 1415
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
மூட நம்பிக்கையில் மூழ்கி இருந்த முஸ்லிம் சமூகத்தை மீட்டி எடுப்பதற்கு பல தியாகங்களை செய்தவர்கள்
இன்று சாத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்கி தங்களை அறியாமல் வழிகேடுகளை ஹதீஸ் மறுப்புகளை நோக்கி வேகமாக பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது
சிந்திக்க வேண்டும் என்று கட்டளையிட்ட இஸ்லாம் அந்த சிந்தனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை மறந்து விட்டனர்
அறிவும் அறிவியலும் ஓர் எல்லைக்கு உட்பட்டது உறுதியாக்கப்பட்ட
மார்க்க விவகாரங்களில் அறிவு சொல்வதை தான் ஏற்பேன் அல்லது அறிவியல் சொல்வதை தான் ஏற்பேன் என்று முடிவு செய்ததின் விளைவு தான்
அஹ்ல குர்ஆன் ( ஹதீஸ் மறுப்பு ) எனும் வழிகெட்ட கொள்கை
இந்நிலையை தேர்வு செய்து பயணித்தவர்கள் நாளடைவில் நாத்தீகர்களின் மறு பிறவிகளாக காட்சி தந்து கொண்டிருப்பதை கண் கூடாக பார்த்து வருகிறோம்
அந்நிலையை நோக்கி சாத்தான் நம்மை இழுத்து செல்லும் முன்பு நம் ஈமானை கவனத்துடன் தற்காத்து கொள்வோம்
அங்கீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை பின்பற்றுவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விட்டு இந்த ஹதீஸ் அறிவியலுக்கு ஒத்து வருகிறதா அந்த வசனம் அறிவியலுக்கு ஒத்து வருகிறதா என்று அவசியமற்ற ஆய்வுகளை அது போன்ற செய்திகளை பரப்புவதை ஓரம் கட்டுவோம்
ஆதாரப்பூர்வமாக பதிவாக்கப்பட்ட தகவல் என்ற காரணத்தால் நான் இதை பின்பற்றினேன் யாஅல்லாஹ் என்று மறுமையில் இறைவனிடம் காரணம் கூற வாய்ப்பு இருக்கிறது
அதே நேரம் ஆதாரப்பூர்வமாக உள்ளது என்று தெரிந்தும்
எனது அறிவும் அறிவியலும் இதை ஏற்கவில்லை என்ற காரணத்தை சொல்லி மறுமையில் தப்பிக்க இயலாது
وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக
அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள் அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக
(உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால் சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக
மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்
(அல்குர்ஆன் : 5:49)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment