மருத்துவர்களும் கொரோனாவும்

மனிதாபிமான இடைவெளிக்கு
                    மறுபெயர்
        சமூக இடைவெளியா  ?

        மருத்துவமனைகளும்
             மருத்துவர்களும்
                        --------------
         J . யாஸீன் இம்தாதி
                       =========

கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து மருத்துவனைகளுக்கு செல்லும் எந்த நோயாளிகளும் மருத்துவர்களால் சரியாக கவனிக்கப்படுவது இல்லை முறையாக நோய் விசாரிக்கப்படுவதும் இல்லை

தனியார் மருத்துவமனைகளும் அரசாங்க மருத்துவமனைகளும் இதில்  விதிவிலக்கு இல்லை என்றே நோயாளிகள் பரவலாக குற்றம் சுமத்துகின்றனர்

மருத்துவமனைகளுக்கு சென்று நோய்களை முறையிட்டு தற்போது மருந்து வாங்குவதை விட மெடிக்கல் கடைகளுக்கு சென்று நோய்களை முறையிட்டு  மருந்துகளை வாங்குவதையே  மக்கள் விரும்புகின்றனர்
காரணம் அந்தளவுக்கு மக்களின் மனதில் அதிருப்தியை மருத்துவதுறையினரே உருவாக்கி விட்டனர்

இதில் வேதனையான விசயம் என்னவெனில் மருத்துவம் பார்ப்பதற்கு  வாங்கப்படும் கூலியில் ஒரு குறைபாடும் அவர்களிடம் காணப்படவில்லை

நோயாளிகள் மூலம்  கொரோனா தொற்று தாவிவிடுமோ என்று அஞ்சும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் மூலம் பெறப்படும் லஞ்சம் மற்றும் இதர தொகைகளை பெறுவதின் மூலம்  கொரோனா தொற்று தாவாது என்பதில் மாத்திரம் உறுதியாக செயல்படுகின்றனர்

மருத்துவம் என்பது வட்டி தொழில் போல் தற்போது உருவெடுத்து விட்டது

சமூக இடைவெளியை வரம்பு மீறி  வலியுறுத்தி மனித சமூகத்தில் இருந்த  மனிதாபிமானத்திற்கும்  ஈவு இரக்க தன்மைக்கும் அதிகமான  இடைவெளியை ஏற்படுத்தி விட்டது தான் WHO மற்றும் மருத்துவதுறை  செய்த 2020 ஆண்டு  சாதனை

கைகளில் பாதுகாப்பு கவசங்களை அணிந்தும்
வாய் மூக்கு பகுதிகளில்  தற்காப்புக்கு தரமான  மாஸ்க்கை அணிந்தும் நீண்ட இடைவெளியை பின்பற்றி கொண்டும்
கொரோனா நோய் அல்லாத பிற  நோய்களை முறையிட வரும் நோயாளிகளிடமும் செவ்வாய் கிரகத்தில் இருந்து கொண்டு மருத்துவம் பார்ப்பது போல் தங்களை உருமாற்றி கொண்டு காட்சி தருவது  அவசியமற்றது
அறுவை சிகிச்சை நேரம் செய்யும் தற்காப்புகளை ஆலோசனை கூறும் சபைகளிலும் பின்பற்றுவது கொரோனா தொற்றை பூதாகரமாக்கி விட்டது

இவ்வாறு மருத்துவம் பார்ப்பதற்கு பதில்  வீடுகளில் இருந்தே  தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகளை  கூறினாலே போதுமானது என்றே கருத தோணுகிறது

முறையான இறைநம்பிக்கை இல்லாது இருப்பதும்
விதியின் மீதுள்ள அவநம்பிக்கையும் தான் மருத்துவர்களை இந்நிலைக்கு தள்ளி உள்ளது

ஆங்கில மருத்துவத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கும் இவர்களின் கோழைத்தனமான கோமாளித்தனமான   செயல்களும் மூல காரணமாக உள்ளது

இதில் விதிவிலக்காக சில மருத்துவர்களின் அணுகுமுறை இருப்பதையும் மறுக்க இயலாது
அவர்கள் பாராட்டதக்கவர்களே

எந்த ஒன்றையும் வரம்பு மீறி எச்சரிக்கை செய்கின்ற பொழுது
அதன் முடிவுகள்  மனித சமூகத்திற்கு பயன் தராது

கொரோனா என்பதும் ஒரு நோய் அது மனிதனின் உயிரை பறிக்கும் இறைவனின் தூதுவன் அல்ல

இதற்கு எடுத்துக்காட்டாக கொரோனாவால் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர்களையும் இஸ்லாமிய அமைப்புகளையும் மருத்துவர்கள் இனிமேலாவது முன்னுதாரணமாக்கி கொள்ள வேண்டும்

அவர்களும் மனிதர்கள் தான்
நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு பாரதூரமான பாதிப்புகளை அவர்கள் அடையவும் இல்லை
சமூக சேவையில் இருந்து இந்த நிமிடம் வரை  தளர்ந்து விடவும் இல்லை


        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்