ஈ தொடர்பான மறுப்பு பாகம் இரண்டு
ஈ தொடர்பான ஹதீஸ் பற்றி
P . ஜைனுல் ஆப்தீன்
--------------
பாகம் இரண்டு
J . யாஸீன் இம்தாதி
=========
நான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மறுப்பாளர்
நீங்கள் பலவீனமான ஹதீஸ் மறுப்பாளர்கள்
இறைவன் வழங்கிய குர்ஆன் மறுப்பாளர்கள்
இவ்வாறு கூறியதின் மூலமாக அவர் இதுவரை மறுத்து வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு வேறு எவரும் தகுந்த மறுப்பு சொல்லவே இல்லை
அவ்வாறு சொல்லப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானதே என்ற நஞ்சை தான் மீண்டும் விதைக்க முற்பட்டுள்ளார்
அவரை சார்ந்த மக்கள்
அவர் அல்லாத வேறு எவரது விளக்கத்தையும் மறுப்பையும் முழுமையாக கேட்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை என்ற நம்பிக்கையில் வழமை போல் பல மணி நேரம் பேசியுள்ளார்
பீ . ஜைனுலாப்தீன் தனது தவறான வாதத்திற்கு முட்டு கொடுக்கும் விதமாக சஹாபாக்களுக்கு இடையே நடந்த அதிக பட்ச விளக்கங்களையே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பதற்கு ஆதாரமாக்கி
உமர் (ரலி) அவர்கள் போன்ற சஹாபாக்களை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்வீர்களா ? என்று எதிர் கேள்வியை எழுப்பி அவர் சார்ந்த மக்களுக்கு ஒரு வருடத்திற்கான சர்ச்சைக்கு தீனி போட்டுள்ளார்
சஹாபாக்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண் என்று மறுத்திருந்தால் தான் அவ்வாறு கேள்வி கேட்க இயலும்
சஹாபாக்கள் குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸ்களை மறுக்கவில்லை மாறாக நபி (ஸல் )அவர்கள் கூறிய விதம் வேறு நீங்கள் புரிந்து கொண்ட விதம் வேறு என்று அவர்கள் காலத்தில் கேள்வி பட்ட செய்திகளுக்கு அதிகட்பசமான விளக்கங்களை கூறி அந்த ஹதீஸ்களையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள அழகிய வழிமுறையை தான் நடைமுறை படுத்தியுள்ளனர்
மேலும் தன்னை எதிர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்கள் தான்
தன் மீது மக்களுக்கு வெறுப்பை தூண்டுவதற்கு ஹதீஸ் மறுப்பாளர் என்று தனக்கு பட்டம் சூட்டுவதாக விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்
கொள்கை ரீதியாக ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக பீஜேவை பலர் எதிர்த்ததும் எதிர்ப்பதும் உண்மை
ஆனால் வேறு பல காரணங்களுக்காகவும் அவரது சில தவறுகளுக்கு அவர் கூறும் அவசியமற்ற தந்திரமான சமாளிப்புகளின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவும் தான் எதிர்க்கின்றனர் என்பதை திசை திருப்ப முயல்கிறார்
தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட ஈ தொடர்பான எதிர்ப்புகளின் வலிமையை பலவீனபடுத்த
கடந்த காலங்களில் அவர் மறுத்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மீண்டும் பட்டியல் போட்டு
அப்படியானால் இதற்கு என்ன பதில் ? அதற்கு என்ன பதில் ? என்று ஈ யை பெருச்சாளி ஆக்கி அவர் சார்ந்த மக்களை தக்க வைக்க பார்க்கிறார்
தற்போது ஈ தொடர்பான ஹதீஸ் மறுப்புக்கு மட்டும் விடை காண்போம் இன்ஷா அல்லாஹ்
தொடரும் பாகம் மூன்று
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment