பாதிக்கப்பட்டவனின் பிராத்தணை

பாதிக்கப்பட்டவனுக்கு
                      அஞ்சுவீர்
                          --------------
         J . யாஸீன் இம்தாதி
                       =========
பிறர் பொருளாதாரத்தை முன்னேற்றத்தை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தை யார் தனக்குள் விதைத்து கொள்கிறானோ

அவனது தீய செயலை
சாத்தான் அவனுக்கு மகிழ்வாகவே சித்தரிப்பான்

அதன் காரணமாக அவனது மனசாட்சியே கண்டிக்கும் பல செயல்களை நடைமுறை படுத்த அடிக்கல் நாட்டுவான்

அதற்கு உறுதுணையாக சாத்தான் அவனது எண்ணத்தில் பல சந்தேக குணங்களை உருவாக்கி அவனது வெறுப்புணர்வை வலுப்படுத்தி விடுவான்

இறுதியாக அவனது வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் அதை நினைத்து வருந்தும் நிலை வரும் போது அவனால் பாதிப்பை அடைந்து துன்பத்தை சந்தித்த மனிதனை காணுவதை கூட அவமானமாக கருதுவான்

மறுமையில் இறைவனின் மன்னிப்பை எதிர் பார்க்கும் முன் அவனது மன்னிப்பை கேட்டு பதறும் நிலையை நிச்சயம் சந்திப்பான்

காரணம் பாதிக்கப்பட்டவனின் பிராத்தணை அந்தளவுக்கு வலுவானது என்பதே நபிமொழி

    நட்புடன்   J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்