Posts

Showing posts from May, 2021

முதல்வர் மு க ஸ்டாலின்

முதல்வர் மு க ஸ்டாலின்                  அவர்களுக்கு                 வேண்டுகோள்                         --------------       !!  அறிவமுதமே இஸ்லாம்  !!             !! இனிக்கும் இஸ்லாம் !!       வாட்சப் குழு உறுப்பினர்கள்                        =========                      31-05-2021 கடந்த முறை கொரோனா முதல் அலையின் போது ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் நாட்டு மக்களுக்கு அதிருப்தியை தந்த நிலையில் தற்போது திரு முக ஸ்டாலின் அவர்களின்  தலைமையிலான ஆட்சி துவக்கமும் தற்போதைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் நாட்டு மக்களுக்கு முழு திருப்தியை தந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை இவ்வாறே உங்கள் ஆட்சிமுறை தொடர வாழ்த்துக்கள் அதன் காரணமாக தான் நாட்டு மக்களிடம் எவ்விதமான எதிர்ப்பும் மறுப்பும் இது வரை எழவில்லை காரணம் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டு அச்சமின்றி வாழ வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் அபாரமான  எதிர் பார்ப்பு வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் மாறாக உங்கள் வீடு தேடி காய்கறிகள் விற்பனைக்கு வரும் என்ற முதல்வரின் விளம்பரம் நாட்டு மக்களின் மீது கொண்ட  அக்கரை என்பதில

கொரோனாவும் இலுமினாட்டியும்

கொரோனா தொற்றும்         இலுமினாட்டி புராணமும்                      **************            கட்டுரை எண் 1414                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்று நோய்கள் குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட நாடுகளில் தான் தாக்குதலை ஏற்படுத்தியது ஆனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது  என்றால் இது ஒரு திட்டமிடப்பட்ட  சதி ஆகும் இந்த சதியை இலுமினாட்டிகள் தான் செய்தார்கள் என்பதும் இலுமினாட்டி எதிர் கோஷ்டிகள் வைக்கும் வாதங்களில் ஒன்று அப்படியா? நீங்க சொல்றதும் உண்மையா தான் தெரியுதுங்க என்ற ஒப்புதல் வாக்கியத்தோடு பாமரர்கள் வழமை போல்  மவுனமாகி விடுகிறார்கள் 😷😷 ஒரு வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவுகிறது என்றால் அந்த வைரசின் மூலக்கூறும் அதன் வீரியமும் அந்த விதத்தில் அமைந்திருக்கும் என்பது தான் உண்மை கடந்த காலங்களில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் என்பது பெரிய அளவில் வளர்சி அடைந்திருக்கவில்லை தற்காலத்தில் அந்த வசதி வாய்ப்பு கூடுதலாக இருப்பதால் வைரசின் பரவுதலும் மக்களின் பயணத்தின் மூல

மருத்துவர்களும் கொரோனாவும்

மக்கள் சேவை செய்யும்          மருத்துவ துறைக்கு                  ****************            கட்டுரை எண் 1413                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= 1- அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல் என்பது வேறு 2- பயமுறுத்தல் என்பது வேறு கொரோனா தொற்று நோய் இதில் முதலாம் வகையை சார்ந்தது தானே தவிர இரண்டாம் வகையை சார்ந்தது அல்ல அறிவியல் அறிந்தோரும் மருத்துவர்களும் இதை  தெளிவாக உட்கொள்ள வேண்டும் மக்களின் அறிவீனத்தை பயன் படுத்தி ஒரேடியாக சில விசயங்களை வீரியப்படுத்தி சொல்லும் பொழுது அது மக்களின் மனவலிமையை தான் குன்ற வைக்க உதவுமே தவிர மக்களின் மனவலிமையை  செவ்வை படுத்தாது குழந்தைகளை அச்சமூட்ட மான்களை  சிங்கம் என்றும் சொல்ல கூடாது குழந்தைகளின் அச்சம் நீக்க சிங்கத்தை மான் என்றும் சொல்ல கூடாது கொரோனா தொற்றின் எதார்த்தம் புரியாதோர் அதன் விளைவுகளை விளங்காது செய்திகளை பரப்புவது போல் கொரோனா தொற்றின் விளைவை அறிந்தோர் அதன் விளைவுகளுக்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் விதம் செய்திகளை பரப்ப கூடாது இறை நம்பிக்கை கலந்த எச்சரிக்கையே மனித சமூகத்

ஊரடங்கு காலமும் நேரமும்

ஊரடங்கு காலமும் நேரமும்                 ****************            கட்டுரை எண் 1412                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= ஓய்வான நேரத்தை அடைவது தற்கால சூழலில் சிரமமான விசயம் நிம்மதியாக உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் கூட நேரம் அமையவில்லையே என்று வாழ்வில் ஏங்கியோர் பலர் உண்டு நிர்பந்தமான சூழலில் இப்போது அதிபட்சமான ஓய்வு நேரத்தை தனிமையை  ஊரடங்கு வழங்கியுள்ளது ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை சிரமம் இல்லாது இந்த நாட்களில் களா செய்யலாம் நீண்ட நாட்களாக வீடுகளை சுத்தம் செய்து ஒதுக்க நேரம் கிடைக்காதவர்கள் இந்த நேரத்தை அதற்கு பயன்படுத்தலாம் வாழ்வில் ஒரு முறையேனும் திருமறை குர்ஆன் பொருளை படிக்க நேரம் அமையாதவர்கள் இந்த நாட்களில் முழு குர்ஆன் மொழி பெயர்ப்பையும் படித்து முடிக்கலாம் நீண்ட காலமாக உறவுகளுடன் தொடர்பை துண்டித்து வாழ்பவர்கள் இந்த நாட்களில் நலம் விசாரிக்கும் தோரணையில் அறுந்து போன உறவுகளை  புதுப்பிக்கலாம் காலமும் நேரமும் நாம் உருவாக்குபவை அல்ல கடந்த நிமிடத்தை கூட எட்டி பிடிக்க இயலாத மனிதன் தற்போது அமைந்த 

ஃபித்னா வைரஸ்

👽   கொரோனா வைரஸ் 👽            👿  ஃபித்னா வைரஸ் 👿                 ******************                       23-05-2021          J . யாஸீன் இம்தாதி                        ========= உடல் நலனை நாசமாக்கும் வைரஸ் கொரோனா வைரஸ் மறுமை நன்மையை நாசமாக்கும் வைரஸ் ஃபித்னா வைரஸ் ஊரடங்கு கொரோனா வைரஸை ஓரளவு கட்டுப்படுத்தும் சுய பரிசோதனை ஃபித்னா வைரஸை கட்டுப்படுத்தும் உயிரோடு உள்ள மனித உடல் செல் மூலம் வைரஸ் வாழும் பெருகும் பிறர் அந்தரங்க விசயங்களை ரசிக்கும் ஈனத்தன்மையுடைய மனிதர்களின் குணங்களால் ஃபித்னா வைரஸ் தொடரும் பெருகும் கொரோனா வைரஸ் யாரையும் தொற்றும் ஃபித்னா வைரஸ் மார்க்க அறிஞனையும் தொற்றும் கொரோனா வைரஸ் உருமாறும் ஃபித்னா வைரஸ் பல நிலை மாற்றும் கொரோனா வைரஸ் தாக்கியதால் நரகம் செல்ல மாட்டான் ஃபித்னா வைரஸ் தாக்கினால் சுவனம் செல்ல மாட்டான் அதிகம் அஞ்ச வேண்டியது கொரோனா வைரஸா ? ஃபித்னா வைரஸா ? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடை பெறுகிறேன்  ‌‌ وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِ‌ ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியது         (அல்குர்ஆன் : 2:217)         நட்புடன்  J

மாற்றார்களுக்கு

மாற்று மத அன்பர்களுக்கு                ******************                       21-05-2021          J . யாஸீன் இம்தாதி                        ========= பொது சேவையில் ஈடுபடுவது இஸ்லாம் மார்க்கம் வலியுருத்தும் மனித கடமைகளில் ஒன்று அதற்குரிய பிரதிபலனை இறைவன் ( மரணத்திற்கு பின் எழுப்பப்படும் ) மறுமை நாளில் குறைவின்றி தாராளமாக கொடுப்பான் என்பது தான் முஸ்லிம்களின் அபார நம்பிக்கை உலகில் புகழ் அடைவதோ உலக இலாபங்களை பதவிகளை பெறுவதோ  முஸ்லிம்களின்  இலட்சியம் இல்லை என்பதை முஸ்லிம் அல்லாத நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் கொரோனா தொற்றால் இறந்து போன உடலை உங்களை சார்ந்தோர்களே அடக்கம் செய்ய தயங்கும் நிலையில்  இஸ்லாமிய அமைப்புகள் அந்த உடல்களை பெற்று அடக்கம் செய்ய முன் வருவதால் முஸ்லிம்களுக்கு உலகில் என்ன இலாபம்  ? கொரோனா அச்சம் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தயக்கத்தை அச்சத்தை  முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தாமல் இருக்குமா  ? குறிப்பாக இந்திய அளவில் முஸ்லிம்கள் தான் கொரோனா தொற்றை பரப்பினார்கள் என்று சங்கபரிவார கும்பல் அறிவீனமாக அவதூறை பரப்பி  முஸ்லிம்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய சூழலிலும் அவ

மரணம் தரும் பாடம்

          மரணம் தரும் பாடம்                  ****************            கட்டுரை எண் 1411                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= நல்லா தான் இருந்தார் திடீர்னு மரணமாயிருட்டாருங்க இந்த சொல்லை அடிக்கடி கேள்வி பட்டு வருகிறோம் உடல் நிலை மோசமாக இருந்தவர் மரணத்தை தழுவுவது ஆச்சரியம் இல்லை என்பதே இந்த பதிலுக்கு மூல காரணம் ஆரோக்யமாக இருப்பவர் திடீர் மரணத்தை தழுவினால் அதில் தான் படிப்பினை உண்டு ஆரோக்யமாக நடமாடிய அந்த மனிதனின் உடலை பலவீனபடுத்திய சக்தி எது  ? அந்த ஆரோக்யமான உடலுக்கு மரணத்தை விதித்த சக்தி எது ? எல்லாமே இயற்கை என்றால் ஆரோக்யம் என்பது மரணத்துக்கு நெருக்கமான ஒன்றா ? அல்லது பலவீனம் என்பது மரணத்திற்கு நெருக்கமான ஒன்றா   ? அறிவால் விளக்கம் சொல்ல இயலாத இடத்தில் தான் இறைவன் தனது ஆற்றல் மூலம் மனித சமூகத்திற்கு  விளக்கம் சொல்கிறான் மனிதனின் மமதையை மரணத்தின் மூலம் இறைவன் தோல்வி அடைய செய்கிறான் சொந்தங்களும் பந்தங்களும் மருத்துவர்களும் மருந்துகளும் மனிதனின் உடல் நெருக்கத்தில் இருந்தாலும் அந்த மனித ஆன்மாவின்  நெருக்கத

உள்ளத்தை மெருகுகூட்டுவோம்

    உள்ளத்தை மெருகூட்டுவோம்                   ***************                                        J . யாஸீன் இம்தாதி                        ========= மேனியை மெருகூட்ட மனிதன் செய்யும் முயற்சிகளில் ஆரோக்யத்தை வலுவூட்ட மனிதன் செய்யும் முயற்சிகளில் கால் பகுதி முயற்சியை தனது உள்ளத்தை அழகு படுத்த மனிதன் முயற்சி செய்தால் கூட இறைவனின் அருளால் மறுமை நாளில் மகோன்னத வெற்றியை நிச்சயம் பெற முடியும் எழில் தரும் இல்லத்தின் உள்ளே குப்பை கூளங்களை நிறைப்பதும் இறையச்சம் நிறைக்கும் உள்ளத்தின் உள்ளே கசடுகளை குவிப்பதும் ஒன்று தான் எண்ணங்களை தூய்மை படுத்துவோம் அதன் வண்ணங்களை அழகிய செயல்களால் மெருகூட்டுவோம் فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا  وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏ அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான் மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு          (அல்குர்ஆன் : 2:10)            நட்புடன்  J . இம்தாதி

ஆக்சிஜனும் மரண வியாபாரிகளும்

       ஆக்சிஜன் தட்டுப்பாடும்         மரண வியாபாரிகளும்                    ***************                                        J . யாஸீன் இம்தாதி                        ========= சிறந்த ஆளுமைக்கு எடுத்து காட்டு எதிர் காலத்தில் குடிமக்கள் சிக்கலை சந்திக்க நேர்ந்தால் அந்த சிக்கலை எதிர் கொள்ள தேவையான அடிப்படை  பொருள்களை சேமிப்புகளை  முன்னேற்றபாடாக தயாரித்து வைத்திருக்கும் அரசே சிறந்த ஆளுமைக்கு எடுத்து காட்டு குடிமக்கள் சிக்கலை சந்தித்த பின் அதற்கு தீர்வு காண வேண்டிய நேரத்தில்  திணறுவது சிறந்த ஆளுமைக்கு அழகு அல்ல ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும் ஆக்ஸிஜனை பொருத்தவரை சேமித்து வைக்க கூடிய பொருளாக  இல்லாதிருந்தாலும் நினைத்த நேரத்தில் அதை தயாரிக்கும் ஏற்பாடுகளை முன்னேற்பாடாக அரசு கைவசம் வைத்திருந்திருக்க வேண்டும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை விட ஆக்சிஜன் பற்றா குறையால் ஏற்பட்டு வரும் மரணங்களே  அதிகம் இதை நாட்டு மக்கள் அறியமாட்டார்கள் என்று நினைத்து கொண்டு அரசும் மருத்துவமனைகளும்  கொரோனாவின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கின்றனர் பாமர மக்களுக்கு அறிவியல் தான் தெ