மாற்றார்களுக்கு

மாற்று மத அன்பர்களுக்கு
               ******************
                      21-05-2021
         J . யாஸீன் இம்தாதி
                       =========
பொது சேவையில் ஈடுபடுவது இஸ்லாம் மார்க்கம் வலியுருத்தும் மனித கடமைகளில் ஒன்று

அதற்குரிய பிரதிபலனை இறைவன் ( மரணத்திற்கு பின் எழுப்பப்படும் ) மறுமை நாளில் குறைவின்றி தாராளமாக கொடுப்பான் என்பது தான் முஸ்லிம்களின் அபார நம்பிக்கை

உலகில் புகழ் அடைவதோ
உலக இலாபங்களை பதவிகளை பெறுவதோ  முஸ்லிம்களின்  இலட்சியம் இல்லை என்பதை முஸ்லிம் அல்லாத நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும்

கொரோனா தொற்றால் இறந்து போன உடலை உங்களை சார்ந்தோர்களே அடக்கம் செய்ய தயங்கும் நிலையில்  இஸ்லாமிய அமைப்புகள் அந்த உடல்களை பெற்று அடக்கம் செய்ய முன் வருவதால் முஸ்லிம்களுக்கு உலகில் என்ன இலாபம்  ?

கொரோனா அச்சம்
உங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தயக்கத்தை அச்சத்தை  முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தாமல் இருக்குமா  ?

குறிப்பாக இந்திய அளவில் முஸ்லிம்கள் தான் கொரோனா தொற்றை பரப்பினார்கள் என்று சங்கபரிவார கும்பல் அறிவீனமாக அவதூறை பரப்பி  முஸ்லிம்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய சூழலிலும் அவைகளை புறம்தள்ளி விட்டு இன்று வரை முஸ்லிம் அமைப்புகள் பொது சேவைகளில்  ஈடுபட்டு வருவதை ஊடகத்தின் மூலம் நீங்கள் அறிவீர்கள்

சிறுபான்மை என்று முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பான்மை சமூகத்தை விட சேவைகளும் தியாகங்களும் கூடுதலாக இருப்பதை உங்களால் மறுக்க இயலாது

ரத்த தானம் செய்யும் அமைப்புகளில்  கூட முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் மிகவும் அதிகம்
இதை அரசாங்க அதிகாரிகளும் மறுக்க மாட்டார்கள்

இவைகளை குறிப்பிட காரணம்
நீங்களும் இது போன்ற சேவைகளில் அதிகம் ஈடுபடுங்கள்

சமுதாய கட்சியாக அமைப்பாக ஆன்மீக குருமார்களாக கருதும் உங்களை சார்ந்தோரையும் ஈடுபட வலியுருத்துங்கள்

இவ்விசயத்தில் விதிவிலக்காக உங்களில் சிலரும் உள்ளார்கள் என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை

இவ்விசயத்தில் உங்களுக்கு உறுதுணையாக என்றும் முஸ்லிம் சமுதாயம் இணைந்திருக்கும்

கொள்கையில் நீங்கள் வேறுபட்டாலும் மனிதன் என்ற உணர்வில் நீங்களும் எங்கள் சொந்தங்களே

படைத்தவனையே துதிப்போம்
படைப்பினங்களை மதிப்போம்

  عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وَسَّعَ عَلَي مَكْرُوْبٍ كُرْبَةً فِي الدُّنْيَا وَسَّعَ اللهُ عَلَيْهِ كُرْبَةً فِي اْلآخِرَةِ، وَاللهُ فِيْ عَوْنِ الْمَرْءِ مَاكَانَ فِيْ عَوْنِ اَخِيْهِ

உலகில் துன்பத்தில் சிக்கியவரின் துன்பத்தை யார் நீக்குகிறாரோ அவருடைய மறுமையின் துன்பத்தை இறைவனும் நீக்கிவைக்கிறான்

ஒருவன் தன் சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் இறைவனும் அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
                       =========
         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்