மருத்துவர்களும் கொரோனாவும்
மக்கள் சேவை செய்யும்
மருத்துவ துறைக்கு
****************
கட்டுரை எண் 1413
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
1- அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல் என்பது வேறு
2- பயமுறுத்தல் என்பது வேறு
கொரோனா தொற்று நோய்
இதில் முதலாம் வகையை சார்ந்தது தானே தவிர
இரண்டாம் வகையை சார்ந்தது அல்ல
அறிவியல் அறிந்தோரும்
மருத்துவர்களும் இதை தெளிவாக உட்கொள்ள வேண்டும்
மக்களின் அறிவீனத்தை பயன் படுத்தி ஒரேடியாக சில விசயங்களை வீரியப்படுத்தி சொல்லும் பொழுது அது மக்களின் மனவலிமையை தான் குன்ற வைக்க உதவுமே தவிர மக்களின் மனவலிமையை செவ்வை படுத்தாது
குழந்தைகளை அச்சமூட்ட மான்களை சிங்கம் என்றும் சொல்ல கூடாது
குழந்தைகளின் அச்சம் நீக்க சிங்கத்தை மான் என்றும் சொல்ல கூடாது
கொரோனா தொற்றின் எதார்த்தம் புரியாதோர் அதன் விளைவுகளை விளங்காது செய்திகளை பரப்புவது போல் கொரோனா தொற்றின் விளைவை அறிந்தோர் அதன் விளைவுகளுக்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் விதம் செய்திகளை பரப்ப கூடாது
இறை நம்பிக்கை கலந்த எச்சரிக்கையே மனித சமூகத்திற்கு என்றும் பயன் தரும்
இறை நம்பிக்கையை முற்றிலும் ஓரம் கட்டி விட்டு கொரோனா தொற்று விளைவுகளை மட்டும் தூக்கி பிடித்து சுற்றினால்
அது மனித சமுதாயத்தை கோழை சமுதாயமாக மாற்றி விடும்
அறிவுரை சொல்வதற்கு அறிவியல் துணை தேவை இல்லை
ஆனால் அறிவியலை சொல்வோர் அறிவின் துணை இல்லாது எந்த கருத்தையும் மக்கள் உள்ளத்தில் நிலை நாட்ட முடியாது
மனித வாழ்வில் மரணம் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்று
அந்த மரணத்திற்கு கொரோனா தொற்று தான் தலைமை என்பது மூட நம்பிக்கை
கொரோனா தொற்றால் மாண்டவர்களை விட மீண்டவர்களே அதிகம்
அவ்வாறு மீண்டும் வந்த மக்களின் மறுவாழ்வுக்கு மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஊழியர்களும் தான் காரணம் என்பதை மறுப்பவன் உண்மையில் நன்றி கெட்ட மனிதன் ஆவான்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment