முதல்வர் மு க ஸ்டாலின்
முதல்வர் மு க ஸ்டாலின்
அவர்களுக்கு
வேண்டுகோள்
--------------
!! அறிவமுதமே இஸ்லாம் !!
!! இனிக்கும் இஸ்லாம் !!
வாட்சப் குழு உறுப்பினர்கள்
=========
31-05-2021
கடந்த முறை கொரோனா முதல் அலையின் போது ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் நாட்டு மக்களுக்கு அதிருப்தியை தந்த நிலையில்
தற்போது திரு முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி துவக்கமும்
தற்போதைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் நாட்டு மக்களுக்கு முழு திருப்தியை தந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை
இவ்வாறே உங்கள் ஆட்சிமுறை தொடர வாழ்த்துக்கள்
அதன் காரணமாக தான் நாட்டு மக்களிடம் எவ்விதமான எதிர்ப்பும் மறுப்பும் இது வரை எழவில்லை
காரணம் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டு அச்சமின்றி வாழ வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் அபாரமான எதிர் பார்ப்பு
வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் மாறாக உங்கள் வீடு தேடி காய்கறிகள் விற்பனைக்கு வரும் என்ற முதல்வரின் விளம்பரம் நாட்டு மக்களின் மீது கொண்ட அக்கரை என்பதில் மாற்று கருத்து இல்லை
ஆனால் அதை வாங்கும் பொருளாதார வலிமை எதிர் கொள்ளும் சூழலும் எத்தனை நாட்கள் நாட்டு மக்கள் பெற்றிருப்பார்கள் ?
அன்றாடம் வெளியே சென்று உழைத்தால் தான் குடும்பத்தை தொடர்ந்து நடத்தி செல்ல முடியும் என்ற நிலையில் இருக்கும் நாட்டு மக்களே ஏராளம்
தொற்று நோயாலும் நாட்டு மக்கள் இறந்து விட கூடாது
வறுமை பட்டினியாலும் நாட்டு மக்கள் தவறான முடிவுகளை எடுத்து விட கூடாது
இதை கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கான நிவாரண நிதிகளை ஓரளவுக்காவது ( ரேசன் பொருட்கள் உட்பட மாதம் ரூபாய் ஐயாயிரம் தொகை அளவுக்காவது ) வழங்க உத்தரவு போட வேண்டும்
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து அதிகமாக ஊதியம் வாங்கும் அமைச்சர்கள் அரசாங்க அதிகாரிகளின் சம்பளத்தில் சரிபாதி குறைத்து அதையும் முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க உத்தரவு போட வேண்டும்
அப்போது தான் ஏழைகளின் பொருளாதார நெருக்கடியை அவர்களும் உணர்ந்து ஆத்மார்த்தமாக செயல் படும் எண்ணம் ஏற்படும்
முழு ஊரடங்கு என்பது மட்டுமே கொரோனா தடுப்புக்கு நிரந்தர தீர்வு அல்ல அவ்வாறு எந்த ஆய்வாளர்களும் அறிக்கையும் தரவில்லை
எனவே ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்காது கட்டுப்பாடுகளை அதிகம் போட்டு நாட்டு மக்களையும் அவர்களின் வருமானத்திற்கு வெளியே செல்ல அனுமதிப்பது தான் சரியான பார்வையாகும்
என்ற கோரிக்கையோடு நிறைவு செய்கிறேன்
இப்படிக்கு
இரு வாட்சப் குழு அட்மின்
J . யாஸீன் ( இம்தாதி )
இப்பதிவை சேர் செய்ய விரும்புவோர் அவர்கள் விரும்பும் குரூப் பெயர் அல்லது தனிப்பட்ட பெயரையும் போட்டு கொள்ளலாம்
Comments
Post a Comment