ஆக்சிஜனும் மரண வியாபாரிகளும்
ஆக்சிஜன் தட்டுப்பாடும்
மரண வியாபாரிகளும்
***************
J . யாஸீன் இம்தாதி
=========
சிறந்த ஆளுமைக்கு எடுத்து காட்டு
எதிர் காலத்தில் குடிமக்கள் சிக்கலை சந்திக்க நேர்ந்தால் அந்த சிக்கலை எதிர் கொள்ள தேவையான அடிப்படை பொருள்களை சேமிப்புகளை முன்னேற்றபாடாக தயாரித்து வைத்திருக்கும் அரசே சிறந்த ஆளுமைக்கு எடுத்து காட்டு
குடிமக்கள் சிக்கலை சந்தித்த பின் அதற்கு தீர்வு காண வேண்டிய நேரத்தில் திணறுவது சிறந்த ஆளுமைக்கு அழகு அல்ல
ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும் ஆக்ஸிஜனை பொருத்தவரை சேமித்து வைக்க கூடிய பொருளாக இல்லாதிருந்தாலும்
நினைத்த நேரத்தில் அதை தயாரிக்கும் ஏற்பாடுகளை முன்னேற்பாடாக அரசு கைவசம் வைத்திருந்திருக்க வேண்டும்
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை விட ஆக்சிஜன் பற்றா குறையால் ஏற்பட்டு வரும் மரணங்களே அதிகம்
இதை நாட்டு மக்கள் அறியமாட்டார்கள் என்று நினைத்து கொண்டு அரசும் மருத்துவமனைகளும் கொரோனாவின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கின்றனர்
பாமர மக்களுக்கு அறிவியல் தான் தெரியாதே தவிர அறிவு என்ற ஒன்று உண்டு என்பதை மறந்து விட்டார்கள்
கடந்த காலங்களில் மக்களின் (வரிப்பணத்தின் ) மூலம் அறிவீன அரசியல்வாதிகளால் நாட்டில் நிறுவப்பட்டுள்ள மக்களுக்கு கடுகளவும் பயன் தராத ஆயிரக்கணக்கான சிலைகள் சமாதிகள் மணிமண்டபங்கள் போன்றவைகளுக்கு செய்த தண்ட செலவுகளை தவிர்த்து மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்களை சேமித்து வைத்திருந்தால் கூட
தற்போது கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வாசலில் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்காது
மக்களின் அறியாமையை பயன் படுத்தி கொண்டு இன்று மருத்துவமனைகளும் அரசும் மரண வியாபாரிகளாகவே மாறி விட்டனர்
காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழியை மெய்பிக்கும் வேலையை தான் இன்று மருத்துவமனைகளும் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக போட கடமைப்பட்டுள்ள அரசும் செய்து கொண்டுள்ளது
நாட்டு மக்களின் சாபம் இவர்களை நிம்மதியாக வாழ விடாது வாழ விடவும் கூடாது என்று இறைவனிடம் மன்றாடி பிராத்திப்போம்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment