ஊரடங்கு காலமும் நேரமும்
ஊரடங்கு காலமும் நேரமும்
****************
கட்டுரை எண் 1412
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
ஓய்வான நேரத்தை அடைவது தற்கால சூழலில் சிரமமான விசயம்
நிம்மதியாக உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் கூட நேரம் அமையவில்லையே என்று வாழ்வில் ஏங்கியோர் பலர் உண்டு
நிர்பந்தமான சூழலில் இப்போது அதிபட்சமான ஓய்வு நேரத்தை தனிமையை ஊரடங்கு வழங்கியுள்ளது
ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை சிரமம் இல்லாது இந்த நாட்களில் களா செய்யலாம்
நீண்ட நாட்களாக வீடுகளை சுத்தம் செய்து ஒதுக்க நேரம் கிடைக்காதவர்கள் இந்த நேரத்தை அதற்கு பயன்படுத்தலாம்
வாழ்வில் ஒரு முறையேனும் திருமறை குர்ஆன் பொருளை படிக்க நேரம் அமையாதவர்கள் இந்த நாட்களில் முழு குர்ஆன் மொழி பெயர்ப்பையும் படித்து முடிக்கலாம்
நீண்ட காலமாக உறவுகளுடன் தொடர்பை துண்டித்து வாழ்பவர்கள் இந்த நாட்களில் நலம் விசாரிக்கும் தோரணையில் அறுந்து போன உறவுகளை புதுப்பிக்கலாம்
காலமும் நேரமும் நாம் உருவாக்குபவை அல்ல
கடந்த நிமிடத்தை கூட எட்டி பிடிக்க இயலாத மனிதன்
தற்போது அமைந்த நேரத்தை சிறப்பாக மாற்றினால் மரணம் தரும் ஓய்வும் மகத்தான நிம்மதியை நிச்சயம் பெற்று தரும்
ஊரடங்கு முடிந்த பின் இது நாள் வரை கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று வருந்தினால் அவனை விட அறிவீனன் யாரும் இருக்க இயலாது
وَالْعَصْرِۙ
காலத்தின் மீது சத்தியமாக.
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு நல்லஅமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)
(அல்குர்ஆன் : 103:1,2,3)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment