கொரோனாவும் இலுமினாட்டியும்
கொரோனா தொற்றும்
இலுமினாட்டி புராணமும்
**************
கட்டுரை எண் 1414
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்று நோய்கள் குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட நாடுகளில் தான் தாக்குதலை ஏற்படுத்தியது
ஆனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்றால் இது ஒரு திட்டமிடப்பட்ட சதி ஆகும்
இந்த சதியை இலுமினாட்டிகள் தான் செய்தார்கள் என்பதும் இலுமினாட்டி எதிர் கோஷ்டிகள் வைக்கும் வாதங்களில் ஒன்று
அப்படியா?
நீங்க சொல்றதும் உண்மையா தான் தெரியுதுங்க
என்ற ஒப்புதல் வாக்கியத்தோடு பாமரர்கள் வழமை போல் மவுனமாகி விடுகிறார்கள் 😷😷
ஒரு வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவுகிறது என்றால் அந்த வைரசின் மூலக்கூறும் அதன் வீரியமும் அந்த விதத்தில் அமைந்திருக்கும் என்பது தான் உண்மை
கடந்த காலங்களில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் என்பது பெரிய அளவில் வளர்சி அடைந்திருக்கவில்லை
தற்காலத்தில் அந்த வசதி வாய்ப்பு கூடுதலாக இருப்பதால் வைரசின் பரவுதலும் மக்களின் பயணத்தின் மூலம் உலகளவில் எளிமையாக கடந்து விடும்
இந்த எதார்த்த நிலையை புரியாது கற்பனையில் உதித்த நிரூபிக்க இயலாத செய்திகளை சொல்லி விட்டு அதை இலுமினாட்டிகளின் தலையில் போடுவது ஏற்று கொள்ள இயலாத வாதமாகும்
இலுமினாட்டிகள் தான் கொரோனா வைரசை உருவாக்கி பரப்பினார்கள் என்றால் அதற்குரிய சான்று என்ன ?
அதை கண்டு பிடித்த ஆய்வாளர்கள் யார் ?
எந்த பரிசோதனை கூடத்தில் வைத்து ஆய்வு செய்து கண்டு பிடித்தார்கள் ?
என்று எந்த விதமான சான்றுகளையும் எடுத்து வைக்காது கண்ணில் படும் செய்திகள் கேள்வி படும் செய்திகளை நேரில் இருந்து பார்த்ததை போல் பரப்புவது அறிவார்த்தமான விசயம் அல்ல
உலகில் எந்த தீமைகள் நடந்தாலும் விபரீதங்கள் ஏற்பட்டாலும் சோதனைகள் ஏற்பட்டாலும் அவைகளை இலூமினாட்டிகள் மூலம் தான் செய்வேன் என்று இறைவன் வாக்குறுதி அளித்திருக்கானா ?
சோதனைகளை எற்படுத்துவதற்கு என்றே இலுமினாட்டி என்ற குழுவை இறைவன் சாத்தான்களாக உருமாற்றி ஏவி விட்டுள்ளானா ?
உலகில் எது நடந்தாலும் இயற்கை என்று வாதிக்கும் நாத்தீக அறிவிலி சிந்தனைக்கும் எது நடந்தாலும் அது
இலுமினாட்டிகளின் மறைமுக செயல் என்று சொல்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை
இரண்டிலும் இறைவனின் நேரடி வல்லமையை புறம் தள்ளும் சிந்தனை தான் மறைமுகமாக ஒட்டி கொண்டுள்ளது
சோதனைகளை பட்டியல் போடும் இறைவன் அச்சத்தின் மூலமும் சோதிப்பேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுகின்ற செய்தியை உள்வாங்காது சில முஸ்லிம்களும் இலுமினாட்டி பெயரால் பரப்பப்படும் செய்திகளுக்கு முக்கியதுவம் தருவது கண்டனத்திற்கு உரிய செயலாகும்
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமை உடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக
(அல்குர்ஆன் : 2:155)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment