Posts

Showing posts from November, 2019

இதுவே சுபுஹானல்லா

        இதுவே சுபுஹானல்லாஹ்              ♦♦♦♦♦♦♦♦                                                           கட்டுரை எண் 1290                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                               ★★★★★★★★★★★ தூய்மையை விரும்பும் மனிதனாக இருந்தாலும் சரி அல்லது  தூய்மையை புறக்கணிக்கும் மனிதனாக இருந்தாலும் சரி அவனது உடலியலில் அன்றாடம் மனிதனே வெறுக்கும்  கழிவுகளை சுமக்கும் மனிதனாகவும் கழிவுகளை வெளியேற்றும் மனிதனாகவும் எந்த நிமிடமும்  நடமாடுகிறான் மூக்கு கழிவு கண் கழிவு நகம் கழிவு வாய் கழிவு வியர்வை கழிவு உணவுக்கழிவு இப்படி பல வெறுக்கதக்க கழிவுகள் இவைகள் அனைத்தும் வெளித்தோற்ற கழிவுகள் ஆகும் இவையல்லாது நம் கண்கள் காண இயலாத உடலியல் கழிவுகள் ஏராளம் உண்டு இறுதியில் மனிதன் மரணத்தை தழுவிய பின் அவனது ஒட்டு மொத்த உடலும் கழிவாக மாறுகிறது கணவனோடு  இணைந்தே எந்நேரமும் இருப்பேன் என்று சொல்லும் மனைவியும் மனைவியை விட்டு பிரிவதை கூட நான் கற்பனையில் நினைக்க மாட்டேன் என்று கூறும் கணவனும் தனது நெருங்கிய உறவு மரணித்த பின் அதிகபட்சமாக இரு நாட்களுக்கு மேல் அவர்களின் உடல்  அருகில

உணவு பூச்சாண்டி

               உணவு பூச்சாண்டி         ♦♦♦♦♦♦♦♦♦♦                                                               கட்டுரை எண் 1289                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                 J . Yaseen iMthadhi             ★★★★★★★★★★★ சமூகவலைதலம் மற்றும் ஊடகங்கள் மூலம் காணும் உணவு தொடர்பான எச்சரிக்கைகளை எல்லாம் கருத்தில் கொண்டால் தரையில் இருக்கும் மண் கல் போன்றவைகளை தான் உண்ண வேண்டும் அந்தளவுக்கு உணவு தொடர்பான பலதரப்பட்ட முரண்பட்ட  எச்சரிக்கைகள் தான் மனிதனை உலவியல் ரீதியாக  பயமுருத்துகிறது ஹராமாக்கப்பட்ட போதை பொருள் மதுபானத்தை அருந்துபவர்கள் கூட அதை அருந்தும் போது அந்தளவு அச்சம் கொள்வது இல்லை ஆனால் ஹலால் ஆக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுபவர்கள் தான் இதை உண்ணுவதால் நோய் வருமா ? அதை உண்ணுவதால் நோய் வருமா ? என்ற பீதியில்  தள்ளப்படுகிறார்கள் இதில் வேதனை ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு எதை உண்ண கூடாது என்று எச்சரிக்கை செய்கிறாரோ அதே உணவை உண்ணுவதால் உடலுக்கு  எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வேறு ஒரு மருத்துவர் முரண்பாடாக  உத்திரவாதம் தருகிறார் இவ்விசயத்தில் எந்த உணவை  நம் நாவ

வேலூர் இப்ராஹீம் நிலைப்பாடு

      வேலூர் இப்ராஹீம் நிலைபாடும்               எதார்த்த நிலைபாடும்         ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 1288                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை எழுத்துரிமை என்பது தான் குடிமக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உச்சகட்ட உரிமையாகும் விரக்தியால் தோல்வியால் பாதிக்கப்பட்டதாக கருதும் மனிதன் அதன் விளைவாக தவறான பாதையை தேர்வு செய்து நாட்டின் நலனுக்கு கெடுதி செய்யாமலும் தவறான பாதையை சரிகாணாது  இருப்பதற்காகவும்  தனது ஆதங்கத்தை மேற்கூறப்பட்ட இரு  உரிமையின் மூலம் நாகரீகமாக வெளிப்படுத்தி அவனது மனதை சாந்தப்படுத்தி கொள்வதற்கு தான் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வழங்கப்பட்டுள்ளது வெள்ளையர்களின் ஆட்சியை பல வருடங்கள் எதிர்த்து அவர்களை நம் தேசத்தை விட்டு விரட்டி அடித்தற்கு மூல காரணமே இந்த இரு உரிமைகளும் அவர்கள் ஆட்சியில் இல்லாது இருந்தது தான் மூல காரணம் அந்த அடிப்படையில் தான் பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஒட்டு மொத்த முஸ்லி

பதிவுகளை பக்குவப்படுத்துவோம்

  பதிவுகளை பக்குவப்படுத்துவோம்        ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 128 7                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ நம்மை நோக்கி எழுப்பப்படும் எதிர் கேள்விகளுக்கும் மறுப்புக்களுக்கும் தேவைப்படுகின்ற பட்சத்தில் மாத்திரம் தெளிவான  முறையான அறிவுப்பூர்வமான பதிலை சொல்லி விட்டு ஒதுங்கி விடுவது தான் இஸ்லாம் நமக்கு கற்று தரும் நாகரீகமே தவிர சரியான பதிலை கூட பிறர் மனம் புண்படுவதை போல் கடினமாக எடுத்து வைப்பது நளினம் தவறி எடுத்து வைப்பது எதிர் அணியினர் நம்பியுள்ள தவறான கொள்கையை  கூட இழிவு படுத்தி எடுத்து வைப்பது இதில் எதையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை கடினமான போக்கும் அதை சார்ந்த கோபமான எதிர்ப்புகளும்  நமது மனதை சாந்தியடைய செய்யுமே தவிர அது போன்ற கருத்து பதிவுகள் நடைமுறைகள்  நம்மை எதிரிகளாக நினைப்போருக்கு அறிவுப்பூர்வமான சிந்தனையை நிச்சயம் தூண்டாது இஸ்லாம் எளிமையாக கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ள விசயத்தில் கடினமாக கடந்து செல்லும் நிலைக்கு பெயர்  கொள்கை உறுதி அல்ல மாறாக அது தான்

சீராய்வு மனு பாபர் மஸ்ஜித்

              பாபர் மஸ்ஜித் தீர்ப்பு          சீராய்வு மனு சீர் செய்யுமா        ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 128 6                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                             ★★★★★★★★★★★ தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விசயத்தில் வழக்கு தொடுத்தோர் சமர்பித்த  ஆதாரங்களை கவனிக்காது தவறான தீர்ப்பை வழங்கி இருப்பதாக நினைத்தாலோ அல்லது தீர்ப்பின் அதிகாரத்தை முறைகேடாக பயன் படுத்தப்பட்டதாக அதிருப்தி இருந்தாலோ அதை  கவனித்து வழங்கப்பட்ட தீர்ப்பை  சீர் செய்யுமாறு குறிப்பிட்ட நாட்களில் சமர்பிக்கும்  வழக்குக்கு பெயர் தான் சீராய்வு மனு இது போல் தொடுக்கப்பட்ட பல சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பாபர் மஸ்ஜித் விவகாரமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் முறையிடப்பட்ட சீராய்வு மனு பலன் தருமா என்பது சந்தேகம் தான் காரணம் பல வருடங்களாக பல ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டு ஐந்து நீதிபதிகள் இணைந்து ஆய்வு செய்து வாசிக்கப்பட்டதாக கூறப்படும் தீர்ப்பு தான் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது ராமருக

இயக்கங்களை குறை கூறுவது

   இயக்கங்களை குறை கூறுவதே               சமூக பணி அல்ல       ♦♦♦♦♦♦♦♦♦♦                                                              கட்டுரை எண் 1285                      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                           ★★★★★★★★★★★ நான்கு நபர்கள்  ஒன்றை மொழிந்தால் அதே கருத்தை நாமும் மொழிய வேண்டும் என்ற இறைவன் வழங்கிய  சிந்தனைக்கு எதிரான ஒரு  போக்கு முஸ்லிம்களிடம் பரவலாக  உள்ளது நான்காயிரம்  நபர்கள் ஒரு கருத்தை சொன்னாலும் அந்த கருத்து நடைமுறைக்கு சாத்தியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மார்க்கத்திற்கு முரண்  இல்லாத பட்சத்திலும் இருந்தால் தான் அதை நாமும் கூற வேண்டும் பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் அதிருப்தியில் ஒரே கருத்தில் முஸ்லிம்கள் இருந்தாலும் அதற்கான கண்டனத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏன் இயக்கங்கள் மாறுபட்டு நிற்கின்றது  ? இவர்களுக்கு தனது இயக்கம் தான் முக்கியமே தவிர அரசியல் இலாபம் தான் முக்கியமே தவிர சமுதாய சிந்தனை  அறவே இல்லை என்று அனைத்து இயக்கங்களையும் குறை கூறி அதில் தாங்கள் மட்டும்  நிலையாக இருப்பதாக ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் அர்ப்பமாக மகிழ்சி அடைந்து  வருகின