இயக்கங்களை குறை கூறுவது

   இயக்கங்களை குறை கூறுவதே

              சமூக பணி அல்ல

      ♦♦♦♦♦♦♦♦♦♦                                                
             கட்டுரை எண் 1285
                     بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                
          ★★★★★★★★★★★

நான்கு நபர்கள்  ஒன்றை மொழிந்தால் அதே கருத்தை நாமும் மொழிய வேண்டும் என்ற இறைவன் வழங்கிய  சிந்தனைக்கு எதிரான ஒரு  போக்கு முஸ்லிம்களிடம் பரவலாக  உள்ளது

நான்காயிரம்  நபர்கள் ஒரு கருத்தை சொன்னாலும் அந்த கருத்து நடைமுறைக்கு சாத்தியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மார்க்கத்திற்கு முரண்  இல்லாத பட்சத்திலும் இருந்தால் தான் அதை நாமும் கூற வேண்டும்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் அதிருப்தியில் ஒரே கருத்தில் முஸ்லிம்கள் இருந்தாலும் அதற்கான கண்டனத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏன் இயக்கங்கள் மாறுபட்டு நிற்கின்றது  ? இவர்களுக்கு தனது இயக்கம் தான் முக்கியமே தவிர அரசியல் இலாபம் தான் முக்கியமே தவிர சமுதாய சிந்தனை  அறவே இல்லை என்று அனைத்து இயக்கங்களையும் குறை கூறி அதில் தாங்கள் மட்டும்  நிலையாக இருப்பதாக ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் அர்ப்பமாக மகிழ்சி அடைந்து  வருகின்றனர்

பிரச்சனைக்குரிய விசயத்தில் எது போன்ற எதிர்ப்பு ஒரு சமூகத்தில் நிலவுகிறது என்று தான் அரசாங்கம் பார்க்குமே தவிர அந்த விசயத்தில் அவர்களை சார்ந்த  அனைத்து  இயக்கங்களும் ஒரே அணியில் போராடுகிறார்களா ? அதுவும்  ஒன்று இணைந்து  கூடுகிறார்களா என்று பார்ப்பது இல்லை

காரணம் அது சாத்தியமும் இல்லை என்பதை அரசாங்கம் உணர்ந்தே உள்ளது மாறாக நம் சமூகத்தை சார்ந்த சிலர்கள் தான் அதை புரிந்து கொள்ளவில்லை

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு பைலா முறை ( விதிமுறை)  அமைந்து இருக்கும் அந்த விதிமுறையை கடை பிடித்து தான் எதையும் முன்னெடுத்து செல்ல வேண்டுமே தவிர அந்த விதிமுறையை அவர்களே புறம் தள்ளிவிட்டு நடப்பது நடைமுறையில் பல சிக்கல்களை தான் உருவாக்கும்

போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று வருகிற போது அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் அதை சார்ந்த மக்களாக அல்லது அவர்களின் விதிமுறையை சகித்து கொள்ளும் மக்களாக இருந்தால் தான் அந்த போராட்டமே அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்

மாற்று கருத்துடைய பல மக்களை ஒரு அணியில் ஒன்று திரட்டும் போது அதில் பல விதமான சங்கடங்களை அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களே உருவாக்கி விடுவர்

இறுதியில் கூட்டம் நிறைவடையும் போது இந்த கூட்டத்தை நம்மோடு இணைத்தது தான் இந்த பிரச்சனைக்கே மூல காரணம் என்று அடிப்படை விசயத்தை மறந்து ஒருவரை ஒருவர்  மாறி மாறி குற்றம் சாட்டி திரிவார்கள்

இது போல் சில நிகழ்வுகளும் நமது சமுதாயத்தில் நடைபெற்றே உள்ளது

எனவே இது போன்ற வீண் விவாதங்களை செய்து பணி செய்பவர்களையும் தூற்றி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு அவரவர்களுக்கு எந்த அமைப்போடு இணைந்து தங்களது குரலை வெளிப்படுத்த முடியுமோ நன்மையான காரியங்களை நடைமுறை படுத்த இயலுமோ அதை மட்டும் சிந்தியுங்கள்

நன்மையான செயல்கள் எந்த வடிவில் இருந்தாலும் அதற்கான கூலியை தருவது அல்லாஹ் என்பதை மறந்து விட வேண்டாம்

காணும் இயக்கங்களில் எல்லாம் மூக்கை நுழைத்து அதில் இருந்து வெளியேறியவர்களும் அல்லது அதில் இருந்து வெளியேற்றப்பட்டு வெறுப்பில் இருப்பவர்களும் சமூக கலத்தில் பங்கு கொள்ளாமல் இருப்பவர்களும் நடை முறை விசயத்தை கருத்தில் கொள்ளாது வீண் விவாதம் செய்வதையே மக்கள் சேவையாக கருதும் நபர்களிடமும்  தான் இது போல் வெற்று வாதங்கள் வெளிப்படுகிறது இது ஆரோக்யமான அணுகுமுறை அல்ல

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌  فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

            (அல்குர்ஆன் : 7:8)

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ 
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்

            (அல்குர்ஆன் : 23:3)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்