உணவு பூச்சாண்டி
உணவு பூச்சாண்டி
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1289
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
J . Yaseen iMthadhi
★★★★★★★★★★★
சமூகவலைதலம் மற்றும் ஊடகங்கள் மூலம் காணும் உணவு தொடர்பான எச்சரிக்கைகளை எல்லாம் கருத்தில் கொண்டால் தரையில் இருக்கும் மண் கல் போன்றவைகளை தான் உண்ண வேண்டும்
அந்தளவுக்கு உணவு தொடர்பான பலதரப்பட்ட முரண்பட்ட எச்சரிக்கைகள் தான் மனிதனை உலவியல் ரீதியாக பயமுருத்துகிறது
ஹராமாக்கப்பட்ட போதை பொருள் மதுபானத்தை அருந்துபவர்கள் கூட அதை அருந்தும் போது அந்தளவு அச்சம் கொள்வது இல்லை
ஆனால் ஹலால் ஆக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுபவர்கள் தான் இதை உண்ணுவதால் நோய் வருமா ? அதை உண்ணுவதால் நோய் வருமா ? என்ற பீதியில் தள்ளப்படுகிறார்கள்
இதில் வேதனை ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு எதை உண்ண கூடாது என்று எச்சரிக்கை செய்கிறாரோ அதே உணவை உண்ணுவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வேறு ஒரு மருத்துவர் முரண்பாடாக உத்திரவாதம் தருகிறார்
இவ்விசயத்தில் எந்த உணவை நம் நாவும் ஏற்று கொண்டு உடலும் அங்கீகரிக்கிறதோ அதை தாராளமாக உண்ணலாம் பருகலாம் என்பது தான் மன தைரியம் கொண்ட நபரின் முடிவாக இருக்க முடியும்
காரணம் நம் உடல் எதை ஏற்று கொள்கிறது என்பதை முதலில் நம் உடலால் தான் நாம் அறிய முடியும்
நம் உடலே ஏற்று கொள்ளும் உணவை ஒருவர் தடுக்கிறார் என்றால் அதை நாம் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை
நவீன உலகில் அனைவரும் இயற்கை பொருளை தான் உணவாக உண்ண வேண்டும் என்ற வாதமும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை
இயற்கை பொருள் எளிமையாக கிடைக்கும் தருவாயில் செயற்கை பொருளுக்கு முக்கியதுவம் தர வேண்டிய அவசியமும் இல்லை
சுருக்கமாக சொன்னால் உணவு வகைகளில் இது ஹலாலா அல்லது ஹராமா என்பதே நம் பார்வையாக இருந்தால் போதுமானது
இதுவே நம் தனிப்பட்ட அனுபவ ரீதியான கருத்து
மாற்று கருத்து இருந்தால் அதை நீங்கள் செயல் படுத்துவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
ஆனால் பூச்சாண்டி காட்டும் எச்சரிக்கைகள் ஒரு போதும் அறிவாளிகளிடமும் மன தைரியம் உடையோரிடமும் எடுபடாது
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்
நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின்
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்
(அல்குர்ஆன் : 2:172)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment