சீராய்வு மனு பாபர் மஸ்ஜித்

              பாபர் மஸ்ஜித் தீர்ப்பு
         சீராய்வு மனு சீர் செய்யுமா

       ♦♦♦♦♦♦♦♦♦♦                                                
             கட்டுரை எண் 1286
                     بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
               
            ★★★★★★★★★★★

தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விசயத்தில் வழக்கு தொடுத்தோர் சமர்பித்த  ஆதாரங்களை கவனிக்காது தவறான தீர்ப்பை வழங்கி இருப்பதாக நினைத்தாலோ
அல்லது தீர்ப்பின் அதிகாரத்தை முறைகேடாக பயன் படுத்தப்பட்டதாக அதிருப்தி இருந்தாலோ அதை  கவனித்து வழங்கப்பட்ட தீர்ப்பை  சீர் செய்யுமாறு குறிப்பிட்ட நாட்களில் சமர்பிக்கும்  வழக்குக்கு பெயர் தான்
சீராய்வு மனு

இது போல் தொடுக்கப்பட்ட பல சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

பாபர் மஸ்ஜித் விவகாரமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் முறையிடப்பட்ட சீராய்வு மனு பலன் தருமா என்பது சந்தேகம் தான்
காரணம் பல வருடங்களாக பல ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டு ஐந்து நீதிபதிகள் இணைந்து ஆய்வு செய்து வாசிக்கப்பட்டதாக கூறப்படும் தீர்ப்பு தான் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு

இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது ராமருக்கு எழுப்பப்பட்ட கோயிலை இடித்து விட்டு தான் பாபர் அதே இடத்தில் பள்ளிவாசலை கட்டினார் என்பது தான் நெடுங்காலமாக விவாதிக்கப்பட்ட விசயம்

இந்த வாதத்திற்க்கு எதிர் அணியால் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் ஏற்க தகாதவை என்று தெளிவாகவே அறிவிப்பு செய்த பின்பு தான் நீதிபதிகள்  எதிர் அணியினருக்கே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட  இடம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கினார்கள்

அதாவது இந்த வழக்கில் நீதீபதிகளால் கவனிக்க தவறிய எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் வாசிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் அறிய முடிகிறது
ஒரு சாராரின் நம்பிக்கையை மாத்திரம் மூலதனமாக்கி  முறைகேடாகவும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் வழங்கப்பட்ட தீர்ப்பு தான் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு என்பதே தற்போது குடிமக்களால் பரவலாக விவாதிக்கப்படும் உண்மை

மனசாந்திக்காக மீண்டும் ஒரு முறை முஸ்லிம்கள் தரப்பில் சீராய்வு மனு தொடுத்துள்ளனர்

இதில் நீதிபதிகள் ஏற்கனவே தங்கள் மீது  ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைத்து பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதியை நிலை நாட்டுவார்களா  ? அல்லது பழைய தீர்ப்பையே வார்த்தை ஜாலங்களால் மாற்றி  வழங்குவார்களா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த சீராய்வு மனு மூலமும் எதிர் பார்க்கும்  நியாயம் கிடைக்கவில்லை என்று சொன்னால் இவர்களை இறைவன் புறமே சாட்டி விட்டு மீண்டும் இது போல் ஒரு விவகாரத்தை எதிர் தரப்பினர்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து இவ்விசயத்தில் அறிவுப்பூர்வமாக  ஒதுங்கி விடுவதும் வழங்கப்படுவதாக வாக்களித்த ஐந்து ஏக்கர் நிலத்தை புறக்கணித்து விடுவது  தான் சிறந்தது 

இறைவனே சரியான தீர்ப்பாளன் பாபர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளியின் குவிமாடத்தை இடித்து தள்ளிய பல்பீர் சிங்கிற்கு மனமாற்றத்தை கொடுத்து அதற்கு பரிகாரமாக அவரே தொண்ணூறு பள்ளிவாசலை கட்டும் அளவு  நேர்வழியை வழங்கிய இறைவன் இவர்களுக்கும் நேர்வழியை வழங்கட்டும்
  
நமக்கு உரிமை இல்லாத ஒருவரின் இல்லத்தை இடித்து விட்டு அதே இடத்தில் ஒரு வீட்டை கட்டி அநீதமான முறையில் ஒருவன் குடி புகுந்தால் அதனால் பாதிக்கப்பட்ட மனிதனின் சாபமும் பிராத்தணையும் வீண் போகாது  இன்ஷா அல்லாஹ்

قُلْ يَجْمَعُ بَيْنَـنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَـنَا بِالْحَـقِّ  وَهُوَ الْـفَتَّاحُ الْعَلِيْمُ‏ 

கூறும்: “நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான் பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான் அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்

            (அல்குர்ஆன் : 34:26)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்