பதிவுகளை பக்குவப்படுத்துவோம்
பதிவுகளை பக்குவப்படுத்துவோம்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1287
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
நம்மை நோக்கி எழுப்பப்படும் எதிர் கேள்விகளுக்கும் மறுப்புக்களுக்கும் தேவைப்படுகின்ற பட்சத்தில் மாத்திரம் தெளிவான முறையான அறிவுப்பூர்வமான பதிலை சொல்லி விட்டு ஒதுங்கி விடுவது தான் இஸ்லாம் நமக்கு கற்று தரும் நாகரீகமே தவிர
சரியான பதிலை கூட பிறர் மனம் புண்படுவதை போல் கடினமாக எடுத்து வைப்பது நளினம் தவறி எடுத்து வைப்பது எதிர் அணியினர் நம்பியுள்ள தவறான கொள்கையை கூட இழிவு படுத்தி எடுத்து வைப்பது இதில் எதையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை
கடினமான போக்கும் அதை சார்ந்த கோபமான எதிர்ப்புகளும் நமது மனதை சாந்தியடைய செய்யுமே தவிர அது போன்ற கருத்து பதிவுகள் நடைமுறைகள் நம்மை எதிரிகளாக நினைப்போருக்கு அறிவுப்பூர்வமான சிந்தனையை நிச்சயம் தூண்டாது
இஸ்லாம் எளிமையாக கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ள விசயத்தில் கடினமாக கடந்து செல்லும் நிலைக்கு பெயர் கொள்கை உறுதி அல்ல மாறாக அது தான் வரம்பு மீறல்
பல வருடம் பொதுதலத்தில் வலம் வருவோர் இன்னும் இந்த பண்பாட்டு முறையை மீறி தங்களது பதிவுகளை போடுவது வெறுக்கத் தக்க காரியமாகும்
குறிப்பாக மார்க்கம் கற்றவர்கள் இவ்விசயத்தில் கவனத்தை பின் பற்ற வேண்டும்
இது போன்றோர் பதிவுகளை கண்டு கொள்ளாது தவிர்த்து விடுவதே நம் மறுமை வாழ்வுக்கு உவந்தது
எனவே நம்மின் மூலம் வெளிப்படும் கருத்து பதிவுகளை இனிமேலாவது பக்குவப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே( நபியே) நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்
(சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால் அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்
எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக
சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்
பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக
நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்
(அல்குர்ஆன் : 3:159)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment