இதுவே சுபுஹானல்லா

        இதுவே சுபுஹானல்லாஹ்

             ♦♦♦♦♦♦♦♦                                           
               கட்டுரை எண் 1290
                     بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
               
            ★★★★★★★★★★★

தூய்மையை விரும்பும் மனிதனாக இருந்தாலும் சரி அல்லது  தூய்மையை புறக்கணிக்கும் மனிதனாக இருந்தாலும் சரி

அவனது உடலியலில் அன்றாடம் மனிதனே வெறுக்கும்  கழிவுகளை சுமக்கும் மனிதனாகவும் கழிவுகளை வெளியேற்றும் மனிதனாகவும் எந்த நிமிடமும்  நடமாடுகிறான்

மூக்கு கழிவு
கண் கழிவு
நகம் கழிவு
வாய் கழிவு
வியர்வை கழிவு
உணவுக்கழிவு

இப்படி பல வெறுக்கதக்க கழிவுகள் இவைகள் அனைத்தும் வெளித்தோற்ற கழிவுகள் ஆகும்

இவையல்லாது நம் கண்கள் காண இயலாத உடலியல் கழிவுகள் ஏராளம் உண்டு

இறுதியில் மனிதன் மரணத்தை தழுவிய பின் அவனது ஒட்டு மொத்த உடலும் கழிவாக மாறுகிறது

கணவனோடு  இணைந்தே எந்நேரமும் இருப்பேன் என்று சொல்லும் மனைவியும்
மனைவியை விட்டு பிரிவதை கூட நான் கற்பனையில் நினைக்க மாட்டேன் என்று கூறும் கணவனும் தனது நெருங்கிய உறவு மரணித்த பின் அதிகபட்சமாக இரு நாட்களுக்கு மேல் அவர்களின் உடல்  அருகில்  இருப்பதை கூட  விரும்ப மாட்டார்கள் காரணம் அந்தளவு மனிதனின்  உடல் வெறுக்கப்படும் கழிவாக இறைவனால்  மாற்றப்படுகிறது

இதில் தான் மனிதனின் அகம்பாவம் தற்பெருமை போன்ற அனைத்து கீழ்த்தரமான தகுதியற்ற  அம்சங்களும் இறைவனின் சந்நதியில் சுக்குநூறாக்கப்பட்டு சிதறடிக்கப்படுகிறது

இது போன்ற அனைத்து பலவீனங்களை விட்டும் நம்மை படைத்த நாயன் அல்லாஹ்  மிகவும் தூய்மையானவன் மகோன்னதமானவன்

அதனால் தான் அல்லாஹ்  தூய்மையானவன்  ( அதாவது சுபுஹானல்லாஹ் ) என்ற வார்த்தையை மொழிவதை கூட இஸ்லாம் நன்மையான வார்த்தையாக நமக்கு கற்று தருகிறது

சாதாரணமான தூய்மை மணத்தை வெளிப்படுத்தும் விலை உயர்ந்த நறுமண பொருள்களை விரும்பும் மனித சமுதாயம் அந்த தூய்மையான பொருள்களை படைத்து அசுத்தமான பலவீனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும்  இறைவனை எந்தளவு நேசிக்க வேண்டும் விரும்ப வேண்டும்  என்பதை இனியாவது மனித சமுதாயம் சிந்திப்பார்களா  ?

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا  سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ 

அத்தகையோர் நின்ற நிலையிலும் இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்

வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்துஎங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை
நீ மகா தூய்மையானவன் (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக

         (அல்குர்ஆன் : 3:191)

فَسُبْحٰنَ الَّذِىْ بِيَدِهٖ مَلَـكُوْتُ كُلِّ شَىْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 
ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்

          (அல்குர்ஆன் : 36:83)

              நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்