Posts

Showing posts from September, 2018

பகுத்தறிவை தாண்டி பேசும் அறிவிலிகள்

     பகுத்தறிவை தாண்டி பேசும்    !! மெத்தப்படித்த மேதாவிகள்  !!             ♦♦♦♦♦♦♦♦♦♦♦                        30-09-18 கட்டுரை எண்1188 ஞாயிறு கிழமை                                    !!J . Yaseen iMthadhi !!                    **************                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★ கொஞ்சம் ஓவராக படித்தாலே வரம்புகளை மீறி  கட்டுப்பாடுகளை  மீறி அனைத்தும் தெரிந்த ஞானிகளை போலவும் மெத்தப்படித்த மேதாவிகளை போலவும் பேசுவார்கள் என்று வழக்கத்தில்  சில நேரங்களில் சிலர்களை பற்றி நாம்  பேசுவது உண்டு அதை உண்மை படுத்தும் விதமாக இந்தியாவில் நடை பெற்று வரும்  சமீபத்திய நிகழ்வுகள் ஆதாரமாக அமைந்துள்ளது கழிசடைகளை கட்டுப்படுத்தவும் நல்லோர்கள் நிம்மதியாக வாழவும் தான் நீதிமன்றங்களும் நீதிபதிகளும்  சட்டங்களுமே  தவிர உரிமை எனும் பெயரில் யாரும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று கடந்த கால நல்ல சட்டங்களை எல்லாம் தள்ளுபடி செய்வதற்க்கும் ஒழுக்ககேடுகளை ஊக்குவிப்பதற்க்கும்  உருவாக்கப்படுவது சட்டங்கள் அல்ல யாரும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்

சூனியம்

            சூனியத்தை நம்பும்      காஃபிர்களே முஸ்ரிக்குகளே                  ♦♦♦♦♦♦♦♦♦♦♦                       27-09-18 கட்டுரை எண்1186-வியாழன் கிழமை                                    !!J . Yaseen iMthadhi !!                    **************                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★                 சூனியம் என்ற ஒன்று ஏற்கனவே இருந்ததுள்ளது  என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவாக்கப்பட்ட செய்தியை மறுக்காது நம்புதல் என்பது வேறு அதே சூனியத்தை  நான் இப்போதும்  நம்புகிறேன் என்று சொல்வது வேறு வாழ்கையில்  பல விதமான சோதனைகள் ஏற்படுகின்ற போது அந்த சோதனைகளுக்கு தீர்வு கேட்டு குர்ஆன் ஹதீசை நம்பும் எவரும்  சூனியக்காரர்களிடம் செல்வதும் இல்லை இது சூனியக்காரர்களின் சூழ்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளாக இருக்குமோ என்று யோசிப்பதும் இல்லை காரணம் இறைவன் நாடாது நன்மையும் அணுகாது தீமையும் அணுகாது என்பது தான் அடிப்படை ஈமான் ஆகும் ஆனால் சூனியத்தை பற்றி மாற்று கருத்து எழுப்பினால் கூட அவர்களை முஸ்ரிக்குகள்  என்றும் காஃபிர்கள் என்றும் அவர்களுக்கு பின்னால

தவ்ஹீத்வாதிகளின் தற்போதைய அவலம்

  தவ்ஹீத்வாதிகளின் தற்போதைய                 !!  அவலங்கள் !!    ♦♦♦♦♦♦♦♦♦♦♦                       24-09-18 கட்டுரை எண் 1185-திங்கள் கிழமை                                    !!J . Yaseen iMthadhi !!                    **************                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★ முகநூலை மஹ்சர் மைதானம் போல் நினைத்து கொண்டு உண்மைகளை சொல்லி தங்களுக்கான  நீதியை பெற போகிறோம்  என்கின்ற பெயரிலே முகநூலில் மாறி மாறி குறைகளை வெளிப்படுத்தி கொண்டு ஆளாளுக்கு லைவ் நிகழ்ச்சியை போட்டு கொண்டு ஆனந்தமடையும் மனித சமுதாயத்தில் தற்போது  தமிழகம் மற்றும் இலங்கை  தவ்ஹீத்வாதிகளே முதல் இடம் மார்க்க தோரணையில் பயணம் சென்று கொண்டிருந்த நேரத்தில் அதை இயக்க தோரணையாக மாற்றி  தனி மனித விமர்சனங்களை குற்றச்சாட்டுகளை இயக்க ரீதியான விருப்பு வெறுப்புகளை  CD DVD மூலமாக வெளிப்படுத்தியதின் விளைவே தற்போது தவ்ஹீத்வாதிகளின்  முகநூல் பித்னாக்களின் கேந்திரமாக மாறியுள்ளது பித்னாக்களை பேசுவது அல்வாவை விட ருசியானது என்பதற்க்கு சரியான எடுத்து காட்டே சமூகவலை தளத்தில் அங்கம் பெற்றுள்ள

இந்து சமூகமே சிந்திப்பீர்

    அன்பினிய இந்து சமுதாயமே                       சிந்திப்பீர்      ********************************          19-09-18 - புதன்கிழமை               ****************** எந்த ஒன்றை பாதுகாப்பதற்காக நாம் கடும் முயற்சிகளை தியாகங்களை செய்கிறோமோ அந்த ஒன்றை மற்ற எவரும் மதிப்பதை விட நாம் தான் கூடுதலாக மதிப்போம் ஆனால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் மூலமாக கொண்டு செல்லப்படும் சாமி சிலைகள் அனைத்தும் அதை பக்தியோடும் ஆரவாரத்தோடும் வீதி வீதியாக  தூக்கி கொண்டு செல்பவர்களாலே இறுதியாக  சுக்குநூறாக ஆக்கப்படுகிறது அவமரியாதையாக நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள்  தூக்கி வீசப்படுகிறது அதன் மூலம் நீர்நிலைகளும் சுற்று சூழல்களும்  அசுத்தமாக்கப்படுகிறது இது போன்ற மோசமான நிகழ்வுகளை ஏற்படுத்தவா பக்தியின் பெயரால் ஊர்வலம் இது போன்ற ஊர்வலத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுக்கவா பக்தியின் பெயரால் ஊர்வலம்  இது போன்ற நபர்களின் அநீதமான செயல்களுக்கு உறுதுணையாக இருக்கவா பக்தியின் பெயரால் ஊர்வலம் என்பதை அன்பினிய இந்து சமுதாயத்திற்க்கு கேள்விகளாக முன் வைக்கிறோம் பக்தியின் பெயரால் பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்தது

வீண் சந்தேகம்

  வீண் சந்தேகங்களே வெறுப்பை                 வலுவாக்கும் உரம்          !!====================!!      ♦♦♦♦♦♦♦♦♦♦♦                       14-09-18 கட்டுரை எண்1185-செவ்வாய் கிழமை                                    !!J . Yaseen iMthadhi !!                    **************                                    بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★ நீங்கள் இல்லாத நேரம் உங்களை பற்றிய சில குற்றச்சாட்டுகளை மோசமாக  பேசி கொண்டிருந்தார்கள்  என்று சம்மந்தப்பட்ட நபரின் பெயர் குறிப்பிடாது ஒரு தகவலை நாம்  கேள்வி படும் போது அது யாராக இருப்பார்  ? ஒரு வேளை இவராக இருப்பாரோ ? ஒரு வேளை அவராக இருப்பாரோ  ? என்று நம் மனம் எப்போதும் மாறி மாறி சிந்திக்க துவங்கும் இறுதியில் நமக்கு யார் வெறுப்பானவராக இருப்பாரோ அவரை நினைத்து கொண்டு அவரை பற்றிய குறைகளை நாம் பிறரிடம்  சொல்ல துவங்குவோம் திடீரென்று ஒரு நாள் நம்மை பற்றி பேசியது யார் என்று ஆதாரப்பூர்வமாக கேள்வி படுகிற போது ச்சே !! இவரா நம்மை பற்றி குறை சொன்னது  நாம் அவரை அல்லவா தப்பாக நினைத்து விட்டோம் என்று அப்போது தான் நாம் நமத

பகைமையே பாவங்களின் பிறப்பிடம்

பகைமை குணமே பல தீமைகளின்                      !!  தாயகம் !!     ♦♦♦♦♦♦♦♦♦♦♦                       14-09-18 கட்டுரை எண் 1184-வெள்ளி கிழமை                                    !!J . Yaseen iMthadhi !!                    **************                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★ ஆழ் மனதில் ஒருவரை பற்றிய வெறுப்புணர்வு எந்தளவுக்கு நம்மிடம் பதிந்து விடுகிறதோ அந்தளவுக்கு அவரை பற்றிய விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் கயமைத்தனங்களும் பிறர் வேதனையில் இனிமை காணும் தீய குணங்களும் நம்மை அறியாமல் வெளிப்பட்டு கொண்டே வரும் இறுதியில் அந்த நபரின் வீழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை தரும் ஆனால் நம்மால் நேரடியாக பாதிக்கப்பட்ட அவரின் ஒரு நிமிட பிராத்தணையே நம் வாழ்வை நாசமாக்க காரணிகளாக அமைந்து விடும் நமது நாசத்தின் விளைவுகளை நம் குடும்பத்தார்களும் சங்கிலி தொடராக வேறு பல விதங்களில் அனுபவிக்க நேரிடும் அதனால் தான் மற்றவர்களை பற்றிய தனிப்பட்ட ஆராய்ச்சியில் எப்போதும்  எதற்காகவும்  சிந்தனையை செலுத்தாதீர்கள்  என்றும் பாதிக்கப்பட்டவனின் பிராத்தணைக்கு இறைவன் விசயத்தில் அ

இஸ்லாம் நம்மிடம் ஈமான் யாரிடம்

         இஸ்லாம் நம்மிடம் ஈமான்                       யாரிடம்  ?     ♦♦♦♦♦♦♦♦♦♦♦                       13-09-18            !!J . Yaseen iMthadhi !!                    **************                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ              ★★★★★★★★★★★ பெட்ரோல் எனும் கருப்பு தங்கம் ஒரே ஒரு வாரம்  இல்லையானால் ஒட்டு மொத்த உலகமே ஸ்தம்பித்து போகும் பெட்ரோலை பெறுவதற்க்கு தங்கள் நாட்டின் நிலப்பரப்பில் கால் பகுதியை கூட தானமாக எழுதி வைக்க முன் வருவார்கள் காரணம் மனிதனுக்கு உடலில் இதயத்தின்  முக்கியத்துவத்தை  போல் இன்றைய உலக இயக்கத்திற்க்கு பெட்ரோல் முக்கியதுவம் வாய்ந்தது ஆகாயத்தில் பறந்து பல நாடுகளின் மீது ரசாயன குண்டுகளை வீசும் அமெரிக்காவும் கூட தங்கள் நாட்டு ரசாயன வெடிகுண்டுகளை மாட்டு வண்டியில் தான் தூக்கி செல்லும் நிலை ஏற்படும் ஆனால் அந்த பெட்ரோல் வளத்தையே பூமியாக பெற்றுள்ள அரபுலக இஸ்லாமிய நாடுகள் இன்றும் யூத நஸ்ரானிகளுக்கு அஞ்சியும் அவர்கள் கற்று தந்த வழிகேடுகளையே இன்பமாக நினைத்து சொகுசாக  தங்கள் வாழ்வை கழித்து கொண்டுள்ளனர் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ச