தவ்ஹீத்வாதிகளின் தற்போதைய அவலம்
தவ்ஹீத்வாதிகளின் தற்போதைய
!! அவலங்கள் !!
♦♦♦♦♦♦♦♦♦♦♦
24-09-18
கட்டுரை எண் 1185-திங்கள் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
முகநூலை மஹ்சர் மைதானம் போல் நினைத்து கொண்டு
உண்மைகளை சொல்லி தங்களுக்கான நீதியை பெற போகிறோம் என்கின்ற பெயரிலே
முகநூலில் மாறி மாறி குறைகளை வெளிப்படுத்தி கொண்டு ஆளாளுக்கு லைவ் நிகழ்ச்சியை போட்டு கொண்டு ஆனந்தமடையும் மனித சமுதாயத்தில் தற்போது தமிழகம் மற்றும் இலங்கை தவ்ஹீத்வாதிகளே முதல் இடம்
மார்க்க தோரணையில் பயணம் சென்று கொண்டிருந்த நேரத்தில் அதை இயக்க தோரணையாக மாற்றி தனி மனித விமர்சனங்களை குற்றச்சாட்டுகளை இயக்க ரீதியான விருப்பு வெறுப்புகளை CD DVD மூலமாக வெளிப்படுத்தியதின் விளைவே தற்போது தவ்ஹீத்வாதிகளின் முகநூல் பித்னாக்களின் கேந்திரமாக மாறியுள்ளது
பித்னாக்களை பேசுவது அல்வாவை விட ருசியானது என்பதற்க்கு சரியான எடுத்து காட்டே சமூகவலை தளத்தில் அங்கம் பெற்றுள்ள தவ்ஹீத்வாதிகளின் பதிவுகள் தான்
தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக வாய்பேச இயலாது மவுனிகளாக மாறியவர்கள் எல்லாம் தவ்ஹீத் கொள்கையை குறை கூற தற்போது தவ்ஹீத்வாதிகளின் நடைமுறை அவலங்களை தான் ஆதாரமாக்கி அவைகளை பதிவுகளாக போட்டு அர்ப்ப மகிழ்ச்சியும் அடைந்து கொண்டுள்ளனர்
இந்த சூழலில் ஆளாளுக்கு தனி இயக்கம் கண்டு தங்களை தூயவர்களாக ஞானஸ்நானம் பெற்றவர்களாக காட்டி கொள்வது ஒரு புறம்
பணமும் புகழும் சேரும் போது அந்த இடத்தில் பிளவை ஏற்படுத்தவும் குரோதத்தை வலுப்படுத்தவும் கொள்கையை குழி தோண்டி புதைக்கவும் சைத்தான் வலை விரிப்பான் என்பதும் அவனே வெற்றி வாகை சூடுவான் என்பதும் மீண்டும் மீண்டும் தவ்ஹீத்வாதிகளின் மூலமே நிரூபணம் ஆகி கொண்டுள்ளது
சீர்திருத்தம் செய்ய புது இயக்கம் காண்பதே சரியான வழி என்று நினைப்பது தான் தவ்ஹீத்வாதிகளின் மடமை தனம்
தற்போது இருக்கும் எல்லா இயக்கங்களும் இதே பெயரை சொல்லி தான் அதுவும் இதே நபர்களால் தான் வீரியமாக ஆரம்பிக்கப்பட்டது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி
பித்னா கட்ட வண்டியின் ஓட்டுனர்களாக ஆலீம் மற்றும் அதன் தாயிக்களும் அதன் இரு சக்கரங்களாக பொருப்பாளர்களும் கட்ட வண்டியை சுமந்து இழுத்து செல்லும் கால்நடைகளாக உறுப்பினர்களும் இருப்பது கண்கொள்ளா அற்புத காட்சியாகும்
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْا اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்
உங்கள் பலம் குன்றிவிடும்
(துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 8:46)
வெறுப்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment