வீண் சந்தேகம்

  வீண் சந்தேகங்களே வெறுப்பை

                வலுவாக்கும் உரம்
         !!====================!!
     ♦♦♦♦♦♦♦♦♦♦♦

                      14-09-18
கட்டுரை எண்1185-செவ்வாய் கிழமை 
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************

                                   بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
           ★★★★★★★★★★★

நீங்கள் இல்லாத நேரம் உங்களை பற்றிய சில குற்றச்சாட்டுகளை மோசமாக  பேசி கொண்டிருந்தார்கள்  என்று சம்மந்தப்பட்ட நபரின் பெயர் குறிப்பிடாது ஒரு தகவலை நாம்  கேள்வி படும் போது

அது யாராக இருப்பார்  ?

ஒரு வேளை இவராக இருப்பாரோ ?

ஒரு வேளை அவராக இருப்பாரோ  ?

என்று நம் மனம் எப்போதும் மாறி மாறி சிந்திக்க துவங்கும்

இறுதியில் நமக்கு யார் வெறுப்பானவராக இருப்பாரோ அவரை நினைத்து கொண்டு அவரை பற்றிய குறைகளை நாம் பிறரிடம்  சொல்ல துவங்குவோம்

திடீரென்று ஒரு நாள் நம்மை பற்றி பேசியது யார் என்று ஆதாரப்பூர்வமாக கேள்வி படுகிற போது

ச்சே !! இவரா நம்மை பற்றி குறை சொன்னது 

நாம் அவரை அல்லவா தப்பாக நினைத்து விட்டோம்

என்று அப்போது தான் நாம் நமது தவறையே உணர துவங்குவோம்

இதனால் தான் ஆதாரமற்ற தெளிவற்ற எந்த செய்தியை காது வழியாக கேள்வி பட்டாலும் அதற்க்கு முக்கியதுவம் தரக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது

காதுவழியாக கேட்கும் செய்திகளும் எழுத்துப்பூர்வமாக வந்தடையும் செய்திகளும் தரத்தில் ஒன்று என்பதை நினைவில் வைக்க வேண்டும்

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்

ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்

            (அல்குர்ஆன் : 49:12)

இது போல் ஒரு சூழ்நிலை தம்பதியர்களுக்கு இடையில் எற்பட்டால் அவர்களின் மணவாழ்வே நாசமாகிவிடும்

நட்புக்கு இடையில் ஏற்பட்டால் நட்பே துண்டிக்கப்பட்டு விடும்

எனவே நம்மை பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டை  கேள்விபட்டாலும் அந்த செய்தியில் உள்ளபடி குறைகள் நம்மிடம் இருந்தால் அந்த குறையை கூறிய நபர் யார் ? என்று யோசித்து கொண்டிருக்காமல் குறைகளை கலைய முயற்சி செய்ய வேண்டும்

அல்லது அந்த குறை நம்மிடம் இல்லாத பட்சத்தில் நம்மை பற்றி குறை கூறிய நபர்களை கண்டு கொள்ளாது விட்டு விட வேண்டும்

இது தான் நமக்கு மன உளைச்சல்களை எற்படுத்தாது

                நட்புடன்  J  . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்