இஸ்லாம் நம்மிடம் ஈமான் யாரிடம்
இஸ்லாம் நம்மிடம் ஈமான்
யாரிடம் ?
♦♦♦♦♦♦♦♦♦♦♦
13-09-18
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
பெட்ரோல் எனும் கருப்பு தங்கம் ஒரே ஒரு வாரம் இல்லையானால் ஒட்டு மொத்த உலகமே ஸ்தம்பித்து போகும்
பெட்ரோலை பெறுவதற்க்கு தங்கள் நாட்டின் நிலப்பரப்பில் கால் பகுதியை கூட தானமாக எழுதி வைக்க முன் வருவார்கள்
காரணம் மனிதனுக்கு உடலில் இதயத்தின் முக்கியத்துவத்தை போல் இன்றைய உலக இயக்கத்திற்க்கு பெட்ரோல் முக்கியதுவம் வாய்ந்தது
ஆகாயத்தில் பறந்து பல நாடுகளின் மீது ரசாயன குண்டுகளை வீசும் அமெரிக்காவும் கூட தங்கள் நாட்டு ரசாயன வெடிகுண்டுகளை மாட்டு வண்டியில் தான் தூக்கி செல்லும் நிலை ஏற்படும்
ஆனால் அந்த பெட்ரோல் வளத்தையே பூமியாக பெற்றுள்ள அரபுலக இஸ்லாமிய நாடுகள்
இன்றும் யூத நஸ்ரானிகளுக்கு அஞ்சியும் அவர்கள் கற்று தந்த வழிகேடுகளையே இன்பமாக நினைத்து சொகுசாக தங்கள் வாழ்வை கழித்து கொண்டுள்ளனர்
நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்களிடம் இஸ்லாமும் இருந்தது
( இஸ்திகாமத் எனும் )
உறுதியான ஈமானும் இருந்தது
ஆனால் இன்றோ இஸ்லாம் மட்டுமே நம்மிடம் உள்ளது
ஈமான் எனும் கொள்கை உறுதியோ யூத நஸ்ரானிகளிடம் குடி கொண்டு விட்டது
*********************
காரணம் என்ன ?
3596. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்
!அல்லாஹ்வின் மீதாணையாக!
என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை
எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டி போடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்
என்று கூறினார்கள்
நூல் --- ஸஹீஹ் புகாரி
நட்புடன் . இம்தாதி
Comments
Post a Comment