சூனியம்
சூனியத்தை நம்பும்
காஃபிர்களே முஸ்ரிக்குகளே
♦♦♦♦♦♦♦♦♦♦♦
27-09-18
கட்டுரை எண்1186-வியாழன் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
சூனியம் என்ற ஒன்று ஏற்கனவே இருந்ததுள்ளது என்று ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களில் பதிவாக்கப்பட்ட செய்தியை மறுக்காது நம்புதல் என்பது வேறு
அதே சூனியத்தை நான் இப்போதும் நம்புகிறேன் என்று சொல்வது வேறு
வாழ்கையில் பல விதமான சோதனைகள் ஏற்படுகின்ற போது அந்த சோதனைகளுக்கு தீர்வு கேட்டு குர்ஆன் ஹதீசை நம்பும் எவரும் சூனியக்காரர்களிடம் செல்வதும் இல்லை
இது சூனியக்காரர்களின் சூழ்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளாக இருக்குமோ என்று யோசிப்பதும் இல்லை
காரணம் இறைவன் நாடாது நன்மையும் அணுகாது தீமையும் அணுகாது என்பது தான் அடிப்படை ஈமான் ஆகும்
ஆனால் சூனியத்தை பற்றி மாற்று கருத்து எழுப்பினால் கூட அவர்களை முஸ்ரிக்குகள் என்றும் காஃபிர்கள் என்றும் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுவது ஹராம் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் அதில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் வழக்கமாகவே இந்த கருத்தை ஒரே குரலில் ஒப்புவித்து வருகின்றனர்
நபிகளாரின் ஹதீஸ் அமைப்பில் பல தரங்கள் உண்டு
ஹதீசின் நேரடியான பொருளில் விளங்கி செயல்பட வேண்டிய ஹதீஸ்களும் உண்டு
மறைமுகமான பொருளில் அல்லது எதிர் கருத்து முறையில் அமைந்துள்ள ஹதீஸ்களும் உண்டு
பாமரர்களை பொருத்தவரை ஹதீசின் மேலோட்டமான கருத்தையும் அதன் பொருளையும் உள்வாங்கி கொண்டு தான் முடிவை எடுப்பார்கள்
இவ்விசயத்தில் பாமரர்களை குறை கூற இயலாது
அதே நேரம் மார்க்க அறிஞர்களும் இவ்வகையில் செயல்படுவது தான் விந்தையாக உள்ளது
ஒரு காரியத்தின் பக்கம் எவரும் சென்று விடக்கூடாது என்பதற்காக அல்லது அதை வெறுக்க வேண்டும் என்பதற்காக அக்காரியத்தை குப்ரு எனும் பாவத்தோடும் சிர்க் எனும் பாவத்தோடும் ஒப்பீடு செய்து நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கண்டித்த ஹதீஸ்களும் சிலவைகள் உண்டு
அது போன்ற ஹதீஸ்களை மாத்திரம் மேலோட்டமாக வைத்து கொண்டு தன்னை உளப்பூர்வமாக முஸ்லிம் என்று சொல்லும் நபர்களை எல்லாம் காஃபிர்கள் என்று பத்வாக்களை கொடுப்பது ஆய்வின் கோளாரே தவிர அது ஆதாரப்பூர்வமான ஹதீசின் கோளாறு அல்ல
அவ்வாறு நபியவர்களும் முஸ்லிம் என்று அடையாளப்படுத்தி கொண்ட எவர்களையும் காஃபிர் பத்வா கொடுத்து சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தியதும் இல்லை
அதற்க்கு ஒரு ஆதாரமும் இல்லை
***************************
கடமையான தொழுகையை காரணம் இல்லாது புறக்கணிப்பவர்களும் காஃபிர்களாக மாறி விடுவர் என்ற கருத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஹதீஸ்கள் உள்ளது
இது போல் ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து காஃபிர் பத்வா கொடுப்பதாக இருந்தால் இன்றைய முஸ்லிம் சமூகத்தில் எழுபது சதவிகித மக்களை காஃபிர்கள் என்று பத்வா கொடுக்கலாம்
காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு நபர்களாவது தொழுகை சிந்தனை அறவே இல்லாதவர்களாக இருப்பார்கள்
அது போக காஃபிர் என்று எப்போது நாம் ஒருவரை தீர்மானிக்கிறோமோ அப்போதே அவரிடம் இருந்து மார்க்க ரீதியில் பல விசயங்களில் நாம் விலகி இருக்க வேண்டும்
1 - திருமண உறவுகள் ஹராம்
2 - அவர்கள் அறுக்கும் இறைச்சிகள்
உண்ணுவது ஹராம்
3 - அவர்களின் இறப்புக்கு பின்
பாவமன்னிப்பு மற்றும் ஜனாசா
தொழுகை நடத்துவது ஹராம்
அப்படியானால் கடமையான தொழுகைகளை புறக்கணிக்கும் நம் குடும்பத்தார்களிடம் இந்த முறைகளை தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களா ?
தொழுகையை புறக்கணித்து நடப்பவர்களை மட்டும் அல்ல மாதப்போக்கு நேரத்தில் மனைவியிடம் இல்லறம் கூடும் நபர்களை பற்றியும்
இயற்கைக்கு மாற்றமாக மனைவியோடு இணைபவர்களை பற்றியும்
நபிகளாரின் ஹதீஸ்களில் குப்ரு என்ற வார்த்தையை பயன்படுத்தி கண்டிக்கப்படுகிறது
அப்படியானால் சூனியத்தை காரணம் காட்டி பிறர்களை காஃபிர்கள் என்று பத்வா கொடுப்பவர்கள் இது போன்றோரையும் அவ்வாறு காஃபிர் பத்வா கொடுப்பார்களா ?
மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது என்பதில் சந்தேகம் இல்லை
ஆனால் ஆய்வு என்கிற பெயரில் முஸ்லிம்களை கூறுபடுத்துவது காஃபிர் பத்வா வழங்குவது மேலோட்டமாக ஹதீஸ்களை படித்து விட்டு முன் சென்ற ஹதீஸ்கலை வல்லுனர்களின் ஆய்வுகளை எல்லாம் மட்டப்படுத்துவது இவை யாவும் ஆணவத்தின் வெளிப்பாடு ஆகும்
عن جابر قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: ((إن بين الرجل وبين الشرك والكفر: تركَ الصلاة))؛ رواه مسلم
இணை வைப்பாளன் மற்றும் இறை மறுப்பாளனுக்கும் முஃமினுக்கும் இடையில் வேறுபாடே (கடமையான)தொழுகையை விடுவது தான்
என்று நபி( ஸல்) அவர்கள் கூறியதாக நான் செவியுற்றேன் என்று ஜாபிர் ( ரலி) அவர்கள் கூறினார்கள்
( நூல் முஸ்லிம் )
أبو داود (3904) والترمذي (135) وابن ماجة (639) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( مَنْ أَتَى حَائِضًا أَوْ امْرَأَةً فِي دُبُرِهَا أَوْ كَاهِنًا فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) وصححه الألباني في "صحيح أبي داود"
மாதபோக்கு உள்ள மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபடுபவனும் இயற்கைக்கு மாற்றமாக அவர்களிடம் உறவு கொள்பவனும் குறி சொல்பவனை தேடி செல்கிறானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தை மறுத்த காஃபிராவான்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment