பகைமையே பாவங்களின் பிறப்பிடம்

பகைமை குணமே பல தீமைகளின்

                     !!  தாயகம் !!

    ♦♦♦♦♦♦♦♦♦♦♦

                      14-09-18
கட்டுரை எண் 1184-வெள்ளி கிழமை 
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************
                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
           ★★★★★★★★★★★

ஆழ் மனதில் ஒருவரை பற்றிய வெறுப்புணர்வு எந்தளவுக்கு நம்மிடம் பதிந்து விடுகிறதோ
அந்தளவுக்கு அவரை பற்றிய விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் கயமைத்தனங்களும் பிறர் வேதனையில் இனிமை காணும் தீய குணங்களும் நம்மை அறியாமல் வெளிப்பட்டு கொண்டே வரும்

இறுதியில் அந்த நபரின் வீழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை தரும்

ஆனால் நம்மால் நேரடியாக பாதிக்கப்பட்ட அவரின் ஒரு நிமிட பிராத்தணையே நம் வாழ்வை நாசமாக்க காரணிகளாக அமைந்து விடும்

நமது நாசத்தின் விளைவுகளை நம் குடும்பத்தார்களும் சங்கிலி தொடராக வேறு பல விதங்களில் அனுபவிக்க நேரிடும்

அதனால் தான் மற்றவர்களை பற்றிய தனிப்பட்ட ஆராய்ச்சியில் எப்போதும்  எதற்காகவும்  சிந்தனையை செலுத்தாதீர்கள்  என்றும் பாதிக்கப்பட்டவனின் பிராத்தணைக்கு இறைவன் விசயத்தில் அஞ்சி கொள்ளுங்கள் என்றும்  இஸ்லாம் நமக்கு தெளிவாக சொல்கிறது

நாம் ஏன் இவரை எதிர்க்க வேண்டும் ? 

அவ்வாறு  இவரை எதிர்ப்பதால் நமக்கு இந்த உலகில்  என்ன நன்மை ?

அல்லது மறுமையில் இனி கிடைக்க போகும் நன்மைகள் தான் என்ன ?

என்பதை சிந்தித்தாலே நமது செயல்பாட்டில் பல மாற்றங்களை காண இயலும் நமது தவறுகளையும் உணர முடியும்

பகைமையாலும் விரோதங்களாலும் நம் மனதை குப்பைமேடுகளாக மாற்றி நம் மறுமை வாழ்வை நாசமாக்கி கொள்ளவா இஸ்லாத்தை ஏற்றுள்ளோம்

இனியும் வருந்தாத உள்ளங்கள் திருந்தப் போவது இல்லை

திருந்தாத உள்ளங்கள் மறுமையில் வெற்றி வாகை சூடப்போவதும் இல்லை

برزة الأسلمي رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ((يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه، لا تغتابوا المسلمين، ولا تتَّبعوا عوْراتهم؛ فإنه مَن تتبَّع عورة أخيه المسلم، تتبَّع الله عورته، ومَن تتبَّع الله عورته، يفضحه ولو في جوف بيته))[1].

 நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாத சமூகத்தாரே

முஸ்லிம்களை புறம் பேசி திரியாதீர்

அவர்களின் மானத்தை தேடி அலையாதீர்

யார் பிற முஸ்லிமின் மானத்தை தேடி அலைகிறாரோ அவரின் மானத்தை அல்லாஹ்வும் தேடுகின்றான்

யாருடைய மானத்தை அல்லாஹ் தேடுகிறானோ அவன் வீட்டிலேயே தங்கி இருந்தாலும் அவனது மானத்தை அல்லாஹ் வெளிப்படுத்தி விடுவான்

       நூல் சஹீஹ் ஜாமிஉ 7984

            நட்புடன்  J . இம்தாதி
ا


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்