இந்து சமூகமே சிந்திப்பீர்
அன்பினிய இந்து சமுதாயமே
சிந்திப்பீர்
********************************
19-09-18- புதன்கிழமை
******************
எந்த ஒன்றை பாதுகாப்பதற்காக நாம் கடும் முயற்சிகளை தியாகங்களை செய்கிறோமோ அந்த ஒன்றை மற்ற எவரும் மதிப்பதை விட நாம் தான் கூடுதலாக மதிப்போம்
ஆனால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் மூலமாக கொண்டு செல்லப்படும் சாமி சிலைகள் அனைத்தும் அதை பக்தியோடும் ஆரவாரத்தோடும் வீதி வீதியாக தூக்கி கொண்டு செல்பவர்களாலே இறுதியாக சுக்குநூறாக ஆக்கப்படுகிறது
அவமரியாதையாக நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் தூக்கி வீசப்படுகிறது
அதன் மூலம் நீர்நிலைகளும் சுற்று சூழல்களும் அசுத்தமாக்கப்படுகிறது
இது போன்ற மோசமான நிகழ்வுகளை ஏற்படுத்தவா பக்தியின் பெயரால் ஊர்வலம்
இது போன்ற ஊர்வலத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுக்கவா பக்தியின் பெயரால் ஊர்வலம்
இது போன்ற நபர்களின் அநீதமான செயல்களுக்கு உறுதுணையாக இருக்கவா பக்தியின் பெயரால் ஊர்வலம்
என்பதை அன்பினிய இந்து சமுதாயத்திற்க்கு கேள்விகளாக முன் வைக்கிறோம்
பக்தியின் பெயரால் பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்தது
பக்தியின் பெயரால் பக்ரீத் பண்டிகை திருநாளின் மாடுகளை முன்னிருந்தி பல வன்முறைகளை ஏற்படுத்துவது
பக்தியின் பெயரால் இஸ்லாத்தின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிட்டு முஸ்லிம்களை இந்திய திருநாட்டில் அந்நியர்களை போல் சித்தரிப்பது
இதுவே இவர்களின் அன்றாட பொழுது போக்காக இருப்பதை எவராலும் மறுக்க இயலாது
இந்து மதம் இந்துக்களுக்கு தான் புனிதமானது
ஆனால் இது போன்றோருக்கு இந்து மதம் சுயநலத்துக்கு பயன்படுத்தும் கருவியாக மட்டுமே அமைந்துள்ளது
ஆதங்கத்துடன் J . இம்தாதி
Comments
Post a Comment