பகுத்தறிவை தாண்டி பேசும் அறிவிலிகள்

     பகுத்தறிவை தாண்டி பேசும்

   !! மெத்தப்படித்த மேதாவிகள்  !!

            ♦♦♦♦♦♦♦♦♦♦♦

                       30-09-18

கட்டுரை எண்1188 ஞாயிறு கிழமை 
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************
                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
           ★★★★★★★★★★★

கொஞ்சம் ஓவராக படித்தாலே வரம்புகளை மீறி  கட்டுப்பாடுகளை  மீறி அனைத்தும் தெரிந்த ஞானிகளை போலவும் மெத்தப்படித்த மேதாவிகளை போலவும்
பேசுவார்கள் என்று வழக்கத்தில்  சில நேரங்களில் சிலர்களை பற்றி நாம்  பேசுவது உண்டு

அதை உண்மை படுத்தும் விதமாக இந்தியாவில் நடை பெற்று வரும்  சமீபத்திய நிகழ்வுகள் ஆதாரமாக அமைந்துள்ளது

கழிசடைகளை கட்டுப்படுத்தவும் நல்லோர்கள் நிம்மதியாக வாழவும் தான் நீதிமன்றங்களும் நீதிபதிகளும்  சட்டங்களுமே  தவிர

உரிமை எனும் பெயரில் யாரும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று கடந்த கால நல்ல சட்டங்களை எல்லாம் தள்ளுபடி செய்வதற்க்கும்

ஒழுக்ககேடுகளை ஊக்குவிப்பதற்க்கும்  உருவாக்கப்படுவது சட்டங்கள் அல்ல

யாரும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று சொல்வதெற்க்கு அரசியல் அமைப்பு சட்டங்களே தேவை இல்லை

அவ்வாறு உருவாக்கும் நபர்களும் அது போன்ற ஒழுக்க கேடுகளுக்கு அடிமை பட்டவர்கள் என்பது தான் அவர்களின் எதார்த்த வாழ்கை  வெட்ட வெளிச்சமாக உள்ளது

கள்ளக்காதல் குற்றம் இல்லை என்ற சட்டத்தையும் ஹோமோ லெஸ்பிய கேடு கெட்ட உறவு முறைகள் கூடும் என்று  கேள்வி படும் போதே அருவருப்பாக தோன்றும் நிலையில்

இது தான் சரியான சட்டம் என்று மாதர்சங்கங்களும் பகுத்தறிவு பேசும் நாத்தீகர்களும் சினிமா கூத்தாடிகளும் பச்சை கொடி காட்டுவது  அவர்களின் தராதரத்தையும் பகுத்தறிவையும் நம்மை எள்ளி நகையாடவே செய்கிறது

கடந்த 29-09-18 அன்று தந்தி தொலைகாட்சியில் பாண்டே அவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தந்த பேட்டியை காணும் நபர்கள் முகம் சுளிக்கும் விதத்தில் மோசமாக அமைந்திருந்தது

பாண்டே அவர்கள் கேட்ட அறிவுப்பூர்வமான ஒரு கேள்விக்கும் கூட பொருத்தமான பதிலை நீதிபதி சந்துரு சொல்லவில்லை

சுருக்கமாக சொல்வதாக இருந்தால்

1- பெண்கள் விபச்சாரம் செய்வதும் என் பார்வையில் குற்றம் இல்லை

2- சட்டங்களால்  சீர்திருத்தம் செய்ய முடியாது

3 - சமீபத்தில் வழங்கப்பட்ட ஒழுக்க கேடான இரண்டு தீர்ப்புகளும் வரவேற்கதக்கவையே

என்பது தான் நீதிபதி சந்துருவின் மொத்த கருத்தாகும்

இதில் வேதனையான விசயம் என்னவென்றால் முறையான  பலதாரமணம் குற்றம் என்று சொல்லிவிட்டு பல பேரிடம் ஒரு பெண் வேசியை போல் படுக்கையை பகிர்ந்து கொள்வதை உரிமை என்று சொல்லியது தான் படித்த மேதாவிகளின் அறிவிலித்தனத்தை நமக்கு தோலுரித்து காட்டியது

عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا

உலகிலிருந்து இல்மு உயர்த்தப்படுவதும், அறியாமை பரவுவதும் (பகிரங்கமாக) மது அருந்தப்படுவதும், விபச்சாரம் பரவுவதும், இறுதித் தீர்ப்பு நாளின் அடையாளங்களாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                  நூல்   புகாரி

  வேதனையுடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்