அரசியலும் நாமும்
அரசியலும் நாமும் ************** தனது ரசிகர்களை நம்பி அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்கு இப்போது தான் அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படை ஓரளவுக்கு புரிந்திருக்கும் இச்சூழலில் அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் அரசியல் ஞானமற்றவர்களும் தற்போது கரூரில் தவெக பரப்புரையில் நடைபெற்ற அசம்பாவிதத்தை பற்றி பல கருத்துக்களை விவாதிக்கலாம் பரப்பலாம் ஆனால் அதில் எதையும் உறுதியாக நம்ப முடியாது காரணம் அரசியல் என்பதே தந்திரமானது அபாயகரமானது பதவியை அடைவதற்கும் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கும் அரசியல் மூலம் லாபம் அடைவதற்கும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதே உலக அரசியல் புரிய வைக்கும் உண்மை மக்கள் பார்வையில் கடும் எதிரிகளாக காட்சி தருபவர்கள் தங்களுக்குள் மறைமுகமாக பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள் ஒரு தேர்தலில் ஒரு கட்சியை வன்மமாக சாடுபவர்கள் மறு தேர்தலில் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும...