இணைவைப்பு
முஸ்லிம்களை நரகபடுகுழியில்
தள்ளும் இமாம்கள்
************************
கட்டுரை எண் 1523
*******************
இறைவனை எம்முறையிலும் நம்பலாம்
எந்த வடிவத்திலும் வணங்கலாம் என்றிருந்தால் இஸ்லாத்தை கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
காரணம் அனைத்து மதங்களும் அதன் உருவில் உருவாக்கப்பட்டவையே
இதை உணராத ஒருவன்
தன்னை முஸ்லிம் என்று கருதுவது மார்க்க அறிவீனமாகும்
குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனங்களில்
ஒரு இடத்திலும் மகான்களிடம் நேரடியாக கையேந்தி பிரார்த்தனை செய்யுங்கள் என்றோ
அல்லது மகான்களின் பொருட்டால் துஆ செய்யுங்கள் என்றோ நேரடியாகவும் குறிப்பிடப்படவில்லை மறைமுகமாகவும் அனுமதி கொடுக்கப்படவில்லை
கூடுதலாக அல்லாஹ் உங்களுக்கு போதுமானவன் இல்லையா என்றே குர்ஆன் குறிப்பிடுகிறது
اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்கு போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை
(அல்குர்ஆன் : 39:36)
நபிகளாரை வன்மையாக எதிர்த்த எதிரிகளே அது போன்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள் என்றே கண்டிக்கப்படுகிறது
وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِىَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِىْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ قُلْ حَسْبِىَ اللّٰهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின் “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்
(நபியே!) நீர் சொல்வீராக அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால் அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா?
என்பதை நீங்கள் கவனித்தீர்களா? (நபியே!) மேலும் நீர் கூறுவீராக அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்
உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம் அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்
(அல்குர்ஆன் : 39:38)
அபூலஹப்
உத்பா
ஷைபா
அபூஜஹ்ல்
போன்றவர்கள் அல்லாஹ்வை மறுக்கும் நாத்தீககொள்கை உடையவர்கள் அல்ல
மாறாக அல்லாஹ்வை நம்பி அல்லாஹ்விடம் கையேந்துவதற்கு பதில் நல்லடியார்களிடம்
கையேந்துவதை நியாயப்படுத்தியவர்கள் தான்
இந்த அடிப்படையை உணராது மரணத்தை சந்தித்து மறுமையில் நிரந்தரமான நரகை பெற்று விடாதீர்கள்
இணைவைப்பு எனும் பெரும்பாவத்தை கண்டிக்க கடமைப்பட்ட மார்க்க அறிஞர்களே இணைவைப்பை நியாயப்படுத்தும் மக்கத்து காஃபிர்களாக வலம் வருவதே முஸ்லிம் சமுதாயம் இணைவைப்பில் ஊறிப்போனதற்கு மூல காரணம்
لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ
وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்
ஆனால் மஸீஹ் கூறினார் இஸ்ராயீலின் சந்ததியினரே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்று
எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான்
மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும் அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை
(அல்குர்ஆன் : 5:72)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
27-09-2025
Comments
Post a Comment