அரசியலும் நாமும்
அரசியலும் நாமும்
**************
தனது ரசிகர்களை நம்பி அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்கு இப்போது தான் அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படை ஓரளவுக்கு புரிந்திருக்கும்
இச்சூழலில் அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் அரசியல் ஞானமற்றவர்களும் தற்போது கரூரில்
தவெக பரப்புரையில் நடைபெற்ற அசம்பாவிதத்தை பற்றி பல கருத்துக்களை விவாதிக்கலாம் பரப்பலாம்
ஆனால் அதில் எதையும் உறுதியாக நம்ப முடியாது
காரணம் அரசியல் என்பதே தந்திரமானது அபாயகரமானது
பதவியை அடைவதற்கும்
பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கும்
அரசியல் மூலம் லாபம் அடைவதற்கும்
எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதே உலக அரசியல் புரிய வைக்கும் உண்மை
மக்கள் பார்வையில் கடும் எதிரிகளாக காட்சி தருபவர்கள் தங்களுக்குள் மறைமுகமாக பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள்
ஒரு தேர்தலில் ஒரு கட்சியை வன்மமாக சாடுபவர்கள் மறு தேர்தலில் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை என்ற அரசியல் பழமொழியை தந்திரமாக பயன்படுத்தி கொள்வார்கள்
அதிகபட்சமாக அரசியல் பெயரால் அப்பாவி மக்களின் அறியாமை விளக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே தவிர
இந்த விபரீதத்திற்கு பின்னனியில் இவர்களின்
சூழ்ச்சி உள்ளது
அந்த விபரீதத்திற்கு பின்னனியில் அவர்களின் பின்னனி உள்ளது என்று வாதிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் நிலையாகும்
குறிப்பாக யூடியூப்களில் அரசியல் பற்றி விவாதிக்கும் எவரும் அவர்களின் வருமானத்தை மூலமாக வைத்து கருத்து பரிமாறுபவர்களே தவிர நீதிக்கு தலை வணங்குபவர்களோ உண்மையை எடுத்து வைக்கும் சத்தியவான்களோ அல்ல
தேர்தல் நேரத்தில் சமூகத்தின் பாதுகாப்புக்கு ஏற்றும் நாட்டு மக்களின் நலவை நாடியும் சிந்தித்து வாக்களிப்பதுடன் அரசியல் விவாதங்களை விட்டு ஒதுங்கி இருப்பதே சிறந்த நடைமுறை
குறிப்பாக மறுமையை நம்பும் முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
29-09-2025
Comments
Post a Comment