இறைநம்பிக்கையே அடிப்படை

     இறைநம்பிக்கையே அடிப்படை
                ******************
              கட்டுரை எண் 1521
                     ************


ஒரு முஸ்லிம் எந்த இயக்கத்தில் பயணித்தாலும் சரி 
எந்த அறிஞரை முன்னோடியாக கருதினாலும் சரி 
அதிருப்தியில் தனிமையில் செயல்பட்டாலும் சரி 

அவனது இறைநம்பிக்கை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமையாவிடில் மறுமையில் நரகை அடைவான் என்பது மட்டுமே நூறுசதம் உண்மையாகும்

இறைவனின் இலக்கணங்களை 
அறிவது எப்படி  ?
இறைவனுக்கான 99 பண்புகளை உள்வாங்கினாலே போதுமானது 

இறைவனை ரஹ்மான் என்றும்
இறைவனை ரஹீம் என்றும் நம்பிக்கை கொண்டு மறுபுறம் அப்பண்புகளுக்கு எதிரான செயல்பாடுகள் கடுகளவு இருப்பினும்
அவனது இறைநம்பிக்கை 
மாசு படிந்துள்ளது என்பதை உணர வேண்டும்


இறைநம்பிக்கையில் கருத்து வேறுபாடு நிலவினாலும் இறைவன் நாடாது எதுவும் தீண்டாது 
இறைவன் நாடாது எதையும் அடைய முடியாது என்ற அழுத்தமான நம்பிக்கையே  ஒரு முஸ்லிமை தடுமாற்றத்தில் இருந்து தடுக்கும் 



இறைவனை நம்புகின்ற காரணத்தால் 
மட்டும் முஸ்லிம் அல்லாதவர்கள் மறுமையில் வெற்றியடைய முடியாது என்ற வாதத்தில் முஸ்லிம்கள் உறுதியாக இருந்தால்  
அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அது போன்ற தவறான நம்பிக்கைகள் செயல்பாடுகள் தனது இறைநம்பிக்கையில் கலந்துள்ளதா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்


وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

உனக்கும் உனக்கு முன் இருந்தவர்களுக்கும் இறைச்செய்தி  மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால்
நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால் உனது நன்மைகள் (யாவும்) அழிந்து நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள் (என்பதுவேயாகும்)



بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ‏

ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில்  இருப்பீராக



وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ‌  وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌ بِيَمِيْنِهٖ‌  سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை
இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான் மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்
அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்

(அல்குர்ஆன் : 39:65,66,67)

       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            13-9-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்