சுபுஹான மவ்லித் நன்மை தருமா

         சுபுஹான மவ்லித் ஓதுவோம் ?
                  ******************
                 கட்டுரை எண் 1520
                       **********
திருமறை குர்ஆனில் இடம் பெற்றுள்ள வசனங்களை படித்தால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை கிடைக்கும் என்பது நபிகளாரின் வாக்குறுதி 

திருமறையில் இடம் பெற்றுள்ள அரபு வார்த்தை  
நூஹ் என்பதில் மூன்று  எழுத்து உள்ளது 
இந்த வார்த்தையை குர்ஆன் ஓதும் போது படித்தால் முப்பது நன்மை கிடைக்கும்

பிர்அவ்ன் என்ற அரபு வார்த்தையில் ஐந்து எழுத்துக்கள் உள்ளது 
குர்ஆன் ஓதும் போது பிர்அவ்ன் என்ற வார்த்தையை படித்தால்  ஐம்பது நன்மை கிடைக்கும் 

காரணம் திருக்குர்ஆன் என்பது இறைவேதம்  
அதன் மூலம் நன்மைகளை பெறலாம் என்று உத்திரவாதம் கொடுத்திருப்பதும் இறைவனின் தூதர் ஆவார் 

குர்ஆனில் இடம் பெற்றுள்ள அரபு வாரத்தையை ஒருவன் குர்ஆன் ஓதும் சிந்தனை இல்லாமல் வாய்ப்பாடு போல் பிர்அவ்ன் ஈஸா மூஸா என்று படித்தால் அதனால் ஒரு நன்மையும் கிடைக்காது 

இன்னும் கூடுதலாக விவரிப்பதாக இருந்தால் நபிகளாரின் பொன்மொழியை படித்தால் கூட ஹதீசில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அரபி எழுத்துக்கும் பத்து நன்மை நிச்சயம்  கிடைக்காது 
காரணம் நபிகளாரின் பொன்மொழிக்கும் கூட அதன் எழுத்துக்களுக்கு பத்து நன்மை கிடைக்கும் என்று  நபிகளாரின் உத்திரவாதம் இல்லை 


இதை உள்வாங்கியவர்களால் ரபியுலவ்வல் மாதத்தில் படிக்கும் சுபுஹான மவ்லிதுக்கு நன்மைகள் கிடைக்காது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்

காரணம் சுபுஹான மவ்லித் என்பது இறைவனால் வழங்கப்பட்ட நூல் அல்ல நபிகளாரால் அனுமதிக்கப்பட்ட நூலும் அல்ல 

மாறாக யார் என்றே உறுதியாக அறியப்படாத  
அரபு கவிஞனால் நபிகளாரின் மரணத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின்னால்  புனையப்பட்ட அரபிப்பபாடல் புத்தகமே சுபுஹான மவ்லித் என்ற புத்தகமாகும் 

திருமறை குர்ஆனில் இடம் பெற்றுள்ள கவ்சர் என்ற அத்தியாத்தின் மூன்று வசனங்களை ஒரு முறை படிக்கும் போது கிடைக்கும் நன்மைகளை கூட சுபுஹான மவ்லித் என்ற அரபு பாடலை பத்தாயிரம் முறை பக்தியுடன்  படித்தாலும் நிச்சயம் கிடைக்காது 
மாறாக இறைவனும் இறைத்தூதரும் கற்றுத்தராத ஒன்றை நன்மை என்று கருதி படிக்கும் போது நிச்சயம் மறுமையில் நரகமே கிடைக்கும் 

குர்ஆன் ஹதீசுக்கு முரணான பல கருத்துக்களும் கதைகளும் சுபுஹான மவ்லித் அரபு பாடல்களில் இடம் பெற்றுள்ளது என்பது கூடுதலாக தகவலாகும் 
அவைகளை அறியாத பாமர மக்களுக்கு மேற்கோள் காட்டிய தகவலே போதுமானது  

குர்ஆன் சுன்னாவில் இல்லாத ஒன்று மறுமையில் நன்மை கிடைக்காது என்பதே இறைநம்பிக்கையாளருக்கு போதுமானது  



وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் 
வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்

(அல்குர்ஆன் : 33:36)


 

       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                             3-9-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்