திருமணமும் விவாகரத்தும்
திருமணமும் விவாகரத்தும் ****************** கட்டுரை 1517 ********* திருமணமும் விவாகரத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் எளிமையானதாக இருந்தாலும் நடைமுறையில் அவை இரண்டும் எளிதாக இல்லை என்பதே உண்மை குறிப்பாக விவாகரத்து என்பது சமூகத்தில் எளிதானதாக கருதப்படவில்லை மன ரீதியாக இருவரும் உடன்படவில்லை என்பதை அறிந்து கொண்டே பல வருடங்கள் ஊருக்காக குடும்ப கவுரவத்திற்காக சமூகத்திற்காக இதர காரணத்திற்காக குடும்பத்தார்களே பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வயதையும் வீணடித்து கொண்டுள்ளனர் பல ஜமாத்துகள் இருவருக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் யாரோ ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் அறிய முடிகிறது இஸ்லாத்தில் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் இதை உள்வாங்கியே திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளையதலைமுறையின...