வாழ்க்கையே அலை போலே
வாழ்க்கையே அலை போலே
*****************
அவரை திருமணம் செய்திருந்தால்
வாழ்வு சிறப்பாக அமைந்திருக்கும்
இவரை திருமணம் செய்ததின் காரணமாகவே
வாழ்வு சீரழிந்து விட்டது என்ற கற்பனையே பலரின் குடும்ப வாழ்வை சீரழித்து வருகிறது
ஒருவரை திருமணம் செய்யும் முன் பல முறை யோசிக்கலாம் அதற்கு இஸ்லாமும் தடை விதிக்கவில்லை
பலரின் அனுபவ பாடத்தை புறம் தள்ளி உபதேசங்களை உதறிதள்ளி விட்டு
உணர்ச்சிகளுக்கு மட்டும் இடமளித்து துணையை தேர்வு செய்பவர்கள் நிச்சயம் இந்நிலையை அடைவார்கள்
ஒரு மனிதனின் ஆசையும் தேடலும் எப்போதும் தனக்கு சாதகமாகவே கற்பனையில் சிந்திக்க வைக்குமே தவிர தனக்கு பாதமாக சிந்திக்க வைக்க முனைவது இல்லை
பாமரன் முதல் படித்தவன் வரை
இதை வெல்வது சிரமமானது
அதை வென்று விட்டால் எதுவும் வாழ்வில் எளிமையானது
தூரத்தில் இருந்து பார்வையில் நிலவின் அழகை ரசிக்கும் மனிதனை நிலவின் தரைப்பகுதியில் இறக்கி விட்டால் அவன் வாழ்ந்த பூமியை நோக்கியே மீண்டும் வர சிந்திப்பான் முயற்சிப்பான்
இது போன்றதே பலரின் வாழ்வு முறை
விரும்பியதை தேடுங்கள்
இயல்பாக அமைந்ததை மட்டும் நாடுங்கள்
இரு சக்கர வாகனத்தையே ஓட்ட தெரியாதவன் ஷோரூமில் பல இலட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனத்தை சொந்தமாக்கினாலும் அதனால் அவனுக்கு பயன் இல்லை
அமைந்த வாழ்க்கை இரு சக்கரம் போன்றது
கற்பனை வாழ்க்கை நான்கு சக்கரம் போன்றது
ஐந்து வருடத்திற்கு முன்னால் நீங்கள் அதிகம் விரும்பிய ஒன்று
ஐந்து வருடத்திற்கு பின்னால் நீங்கள் மறந்த ஒன்றாக அல்லது நினைவிழந்த ஒன்றாகவே நிச்சயம் இருக்கும்
இது போலவே மணவாழ்க்கை
நீங்கள் அதிகமாக நேசிக்கும் ஒன்று
பலரின் பார்வையில் புறம் தள்ளப்பட்ட ஒன்றாக அல்லது வெறுக்கும் ஒன்றாக இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்
இந்த பட்டியலில் நிச்சயம் ஒவ்வொரு மனிதனும்
இடம் பெற்றிருப்பான்
ஆணும் விதிவிலக்கல்ல
பெண்ணும் விதிவிலக்கல்ல
திருமண என்பது இருவர் மட்டும் இணையும்
பந்தம் அல்ல
இருவரின் இணைப்பை மூலமாக வைத்து
பல உறவுகள் இணையும் இரயில் பெட்டிகள் போன்றது
இருவரில் ஏற்படும் மனக்கசப்புகள் தவறுகள் தவறான தேடல்கள் அனைத்து இணைப்புகளையும் துண்டாக்கும் ஆயுதமாக மாறும்
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
நிந்தித்துக்கொண்டிருக்கும் ( அலைபாயும்) ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்
(அல்குர்ஆன் : 75:2)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
7-4-2025
Comments
Post a Comment