திருமணமும் விவாகரத்தும்

       திருமணமும் விவாகரத்தும் 

                ******************
                     கட்டுரை 1517
                         *********
திருமணமும் விவாகரத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் எளிமையானதாக இருந்தாலும் 
நடைமுறையில் அவை இரண்டும் எளிதாக இல்லை என்பதே உண்மை 

குறிப்பாக விவாகரத்து என்பது சமூகத்தில் எளிதானதாக கருதப்படவில்லை 

மன ரீதியாக இருவரும் உடன்படவில்லை என்பதை அறிந்து கொண்டே பல வருடங்கள் ஊருக்காக குடும்ப கவுரவத்திற்காக சமூகத்திற்காக இதர காரணத்திற்காக குடும்பத்தார்களே பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வயதையும் வீணடித்து கொண்டுள்ளனர்

பல ஜமாத்துகள் இருவருக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் யாரோ ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் அறிய முடிகிறது 

இஸ்லாத்தில் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்


இதை உள்வாங்கியே திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளையதலைமுறையினர் தங்களது வாழ்வை  முடிவு செய்ய வேண்டும் 

இனக்கவர்சிக்காக மட்டும் முக்கியத்துவம் வழங்கி வாழ்வை சிக்கலில் நுழைத்துக்கொள்ள கூடாது

இன்று ஈர்ப்பாக தோன்றும் ஒன்று என்றுமே ஈர்ப்பை ஏற்படுத்தும் என்ற குருட்டு நம்பிக்கையில் வாழ்வை நாசமாக்கிக் கொள்ளக்கூடாது 

வசதி வாய்ப்புகள் மட்டுமே வாழ்வை வளப்படுத்தும் என்ற கற்பனையில் திருமணத்தில் உடன்படக்கூடாது


அனுபவத்தில் பார்த்து வரும் பல சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவே இது 


ஒரு ஆடவனுக்காக குடும்பத்தையே ஒதுக்கி மணமுடித்த பல இளம்பெண்கள் அதே ஆடவனிடமிருந்து விடுதலை பெற தவிக்கும் விவகாரங்களையும் அறிந்துள்ளோம்

ஒரு பெண்ணுக்காக எதையும் சமாளித்து விடலாம் என்று  வீராவசனம் பேசிய வாலிபர்களும் 
எதற்காக இப்பெண்ணை மணமுடித்தோம் என்று குறுகிய நாட்களில்  வருந்தும் வாலிபர்களையும் பார்த்துள்ளோம்

எதையும் ஓரளவு சகித்து வாழலாம் என்ற 
மன உறுதியுடன் உங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யுங்கள் 

இன்ஷா அல்லாஹ் இறையருளால் ஓரளவு 
வாழ்வில் முன்னேற்றம் அடைய இயலும் 

அபார கற்பனைகள் கதை எழுதுவதற்கு பயன்படுமே தவிர எதார்த்த வாழ்வை மாற்றியமைக்க 
துணை புரியாது 

ஆலிமாக இருப்பினும் சரி
ஆலீமாவாக இருப்பினும் சரி
படித்தவர்களாக இருப்பினும் சரி
படிக்காதவர்களாக இருப்பினும் சரி
தொழில் அதிபராக இருப்பினும் சரி
தொழிலாளியாக இருப்பினும் சரி
அவர்கள் அனைவரும் மனித இயல்பை மீறியும்  
வாழ முடியாது
சிக்கல்களை எதிர்கொள்ளாமலும் வாழ்வை கடக்கவும்  இயலாது 

      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                         27-4-2025

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை