Posts

Showing posts from December, 2024

மாதர் சங்கமா மடமைச்சங்கமா

     மாதர்சங்கமா மடமைச்சங்கமா                 *********************                  கட்டுரை எண் 1503                       ************* சமூகவலைத்தளம் கூத்தாடிகளின் கேந்திரமாக மாறியதின் விளைவு தற்போது ஒழுக்ககேடான காரியங்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ஆதரித்து பேசுவதும் கட்டுப்பாடுகளை அடிமைத்தனமாக சித்தரித்து நடைமுறையில் இருக்கும் அழகிய பண்பாடுகளை சீரழிப்பதும் சாதாரணமாகி விட்டது ஆடவனின் பார்வையில் தான் தவறு இருக்கிறது பெண்கள் உடுத்தும் அரைகுறை  ஆடையில் தவறு இல்லை என்று பெண்களே அறிவிலித்தனமாக  பேசி வருவதை பரவலாக காண முடிகிறது  ஆடவன் பார்க்கும் பார்வையில் தான் தவறு இருக்கிறது என்ற வாதத்தில் அப்பெண்கள் உண்மையாளர்களாக  இருந்தால் பெண்கள் முழு நிர்வாணமாகவும் பொது இடங்களில் வலம் வரலாமே  அதில் மட்டும்  என்ன தவறு இருக்கிறது ?பெண்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது ? இவ்வாறு அறிவிலித்தனமாக பேசுபவர்கள் அவர்களின் பெண் மக்க...

அழைப்புப்பணி

   அழைப்புப்பணியின் ஆணிவேர்                *******************                 கட்டுரை எண் 1501                       ************ இஸ்லாத்தை அதன் தூய வடிவிலும் நளினம் தவறாத முறையிலும் எவருக்கும் எதற்காகவும் வலைந்து கொடுக்காத  நிலையிலும் இயன்ற முறையில்   எத்தி வைப்பது முஸ்லிம்களின் மீது  கடமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை  எனினும் ஹிதாயத் என்று குறிப்பிடும் நேர்வழியை இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களை தவிர வேறு எவருக்கும் அழைப்புப்பணி நிச்சயம்  பயனைத்தராது  இறைத்தூதர் நபி ஆதம் (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவரின் ஒரு மகனுக்கு பயன் தரவில்லை இறைத்தூதர் நபி நூஹ்  (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு பயன் தரவில்லை  இறைத்தூதர் நபி இப்ராஹீம் ( அலை) அவர்களின் அழைப்புப்பணி அவரது தந்தைக்கு  பயன் தரவில்லை  இறைத்தூதர் நபி லூத்  (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவரது மன...

மணவாழ்வின் ரகசியங்கள்

       மணவாழ்வின் ரகசியங்கள்               ******************               கட்டுரை எண் 1539                     ************ சிரமங்களை சிக்கல்களை அடிக்கடி எதிர் கொண்டு அவைகளை சகித்து கொள்ளும் தன்மையை ஆடவன் அன்றாட வாழ்வில்  சந்திப்பதால்  அவனது  மனைவி உடல் அளவில்  சிறு அளவு சிரமங்களை அனுபவிக்கும் நிலையில்  பெரியளவுக்கு மனைவியின் சிரமங்களை  சிந்திக்க மாட்டான் அதற்காக வெளிரங்கத்தில் பாசத்தை வெளிப்படுத்தவும் மாட்டான் ஒரு பெண் வெளியுலகில் சிரமங்களை பாரங்களை சிக்கல்களை  எதிர் கொள்ளும் சூழ்நிலை குறைவாக இருப்பதின்  காரணத்தால் கணவனின் சிறு அளவு சிரமங்களை கூட பெரியளவில் மனைவியர்கள் எடுத்துக்கொள்வார்கள் அதை காரணமாக வைத்தே கணவனருகில்   பாசத்தையும் அரவணைப்பையும்  அதிகம் வெளிப்படுத்துவார்கள் மனிதனை இயல்பாக தாக்கும் தலைவலி  உடல் வலியை கணவனிடம் கண்டாலும்  மனைவி கணவனுக்காக  அதிகம்  பதறுவதும் ...

விடியலை தேடி விரக்தியில் மனித சமூகம்

      விடியலை தேடி விரக்தியில்            தத்தளிக்கும் தலைவர்கள்               ******************* எதற்காக போராட வேண்டும் என்று இன்றும் நாட்டு  மக்களை அழைக்கிறார்களோ  எந்த போராட்டங்களை முன்னெடுத்து சாதித்தவர் என்று சில தலைவர்களை முன்னுதாரணம் காட்டுகிறார்களோ  அவர்கள் பெற்றுத்தர துடிக்கும்  பல உரிமைகளை  சுதந்திரங்களை 1446 ஆண்டுகளுக்கு முன்பே எளிதாக பெற்றுத்தந்து சாதனை நிகழ்த்தி காட்டியவர் அண்ணல் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அம்பேத்கர்  பெரியார்  சேகுவாரா போன்றவர்களை முன்னுதாரணம் காட்டுபவர்கள்  அவர்கள் மக்களை திரட்டி எதற்கு  போராடினார்களோ அந்த உரிமைகளை சுயமரியாதை உணர்வை கடந்த பதினான்கு நூற்றாண்டுகள் முதல்  இன்று வரை நடைமுறையில் வெளிப்படுத்தி  காட்டுவது  முஸ்லிம் சமுதாயமே மொழி இன உணர்வை தாண்டியதே மனிதநேயம் என்பதை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே  நடைமுறை படுத்த இயலும் என்பதற்கும் நபிகள் நாயகத்தின் வரலாறு எடுத்துக்காட்டாக திகழ்கிறது  படைப்பா...

மனிதர்கள் பல வகை பாகம் ஒன்று

             மனிதர்கள் பல வகை                         பாகம் ஒன்று                   ***************** இறையில்லத்தில் காணும் போது அல்லது மார்க்க நிகழ்வுகளில் காணும் போது  உற்ற நண்பனை போலவும்  நெருக்கமான தொடர்பு வைத்திருப்பது போலவும் தங்களை  காட்டிக்கொள்ளும் சிலர் பொது இடங்களில் கண்டால் அல்லது அவர்களது ஊரில் கண்டால் அறவே பழக்கம் இல்லாதவரை போலவும்  அல்லது கடமைக்காக சிரித்து விட்டு  கடந்து செல்வதையும் காண முடியும் தனிப்பட்ட நபர்களின் குணமாகவும் இது இருக்கிறது சில ஊரார்களின் தன்மையாகவும் இது இருக்கிறது  இதற்கான காரணம் தெளிவாக தெரியாவிடிலும் இந்த பண்பு அவர்களின் அணுகுமுறையை குறைத்து மதிப்பீடு செய்ய வைக்கும் ஆனால் இதற்கு நேர் எதிரான  அழகிய பண்புகளும் சிலரிடமும்  சில ஊரார்களிடமும் உள்ளது  நாம் அவர்களை பார்த்து புன்னகைக்கும் முன்பே அவர்களே ஆவலாக வந்து சந்திப்பதும் புன்னகைப்பதும் மகிழ்வை தூண்டும் அவர்களின...

நீதி அநீதி

         அநீதவான்களுக்கு எச்சரிக்கை                    ***************** ஏழ்மை அனாதை கோழை அந்நியன் பணியாளன்  வெளியூர்க்காரன் என்பதற்காக எவருடைய  விவகாரங்களில் தலையிடும் போது  நீதி அநீதியாக மாறுகிறதோ  பேச்சு வார்த்தைகள் கண்ணியம் இழக்கிறதோ அவர்களே மறுமை நாளில் கடும் தண்டனை பெறுபவர்களில்  முதன்மையானவர்கள் குறிப்பாக குர்ஆன்  சுன்னாவை மட்டும் அடிப்படையாக ஏற்றவர்கள் நீதியில் தடுமாறும் போது அவர்களுக்கான தண்டனை இரட்டிப்பாக்கப்படுகிறது  குடும்பத்திற்காக  பதவிக்காக பணத்திற்காக இயக்கத்திற்காக நட்புக்காக  புறகாரணங்களுக்காக நீதியின் முதுகெழும்பை முறிப்பவர்கள் மறுமையில் நாதியற்றவர்களாய் தலைகுனியும் நிலையை  நிச்சயம் சந்திப்பார்கள்  அவர்களின் தொழுகையோ தானதர்மங்களோ  இதர பணிகளோ அநீதியை நிலைநாட்டியதற்கு துணையாக வராது  தொழாமல் தண்டனையை அனுபவிப்பவனை விட நல்லொழுக்கம் பேணாதவன் தண்டனையை அனுபவிப்பதை விட அவைகளை பேணுபவன் திரட்டிய நன்மைகளை நாசமாக்குவதே அறிவீனத்தின் உச்சம் காலை...