மனிதர்கள் பல வகை பாகம் ஒன்று
மனிதர்கள் பல வகை
பாகம் ஒன்று
*****************
இறையில்லத்தில் காணும் போது
அல்லது மார்க்க நிகழ்வுகளில் காணும் போது
உற்ற நண்பனை போலவும்
நெருக்கமான தொடர்பு வைத்திருப்பது போலவும் தங்களை காட்டிக்கொள்ளும் சிலர்
பொது இடங்களில் கண்டால்
அல்லது அவர்களது ஊரில் கண்டால்
அறவே பழக்கம் இல்லாதவரை போலவும்
அல்லது கடமைக்காக சிரித்து விட்டு
கடந்து செல்வதையும் காண முடியும்
தனிப்பட்ட நபர்களின் குணமாகவும் இது இருக்கிறது
சில ஊரார்களின் தன்மையாகவும் இது இருக்கிறது
இதற்கான காரணம் தெளிவாக தெரியாவிடிலும்
இந்த பண்பு அவர்களின் அணுகுமுறையை குறைத்து மதிப்பீடு செய்ய வைக்கும்
ஆனால் இதற்கு நேர் எதிரான
அழகிய பண்புகளும் சிலரிடமும்
சில ஊரார்களிடமும் உள்ளது
நாம் அவர்களை பார்த்து புன்னகைக்கும் முன்பே அவர்களே ஆவலாக வந்து சந்திப்பதும் புன்னகைப்பதும் மகிழ்வை தூண்டும்
அவர்களின் அணுகுமுறையை வைத்தே
அவர்களின் குணாதிசயங்களை தரமாக மதிப்பீடு செய்யவும் தூண்டும்
வேலை பளுவின் காரணமாக அவசரமாக செல்வோரை எளிதாகவும் கண்டறிய முடியும்
அத்தகையவர்களை மனிதனின் மனம் குறைத்து மதிப்பீடும் செய்யாது
மனிதர்கள் பல வகை
அதில் இதுவும் ஒரு வகை
தொடரும் ------------------
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
4-12-2024
Comments
Post a Comment