குர்ஆன் சுன்னா
சிந்தனைக்கு சில வரிகள் ********************* நம்பிக்கையை அடகு வைக்கும் மனிதனிடம் யாரையும் எதிரியாக சித்தரிக்கலாம் யாரையும் நண்பனாக சித்தரிக்கலாம் சிந்தனையை அடகு வைக்கும் மனிதனிடம் எதையும் புரட்சியாகவும் விதைக்கலாம் எதையும் வறட்சியாகவும் விதைக்கலாம் குர்ஆன் சுன்னாவை அடகு வைக்கும் மனிதனிடம் எதையும் நன்மையாக நம்ப வைக்கலாம் எதையும் தீய வழியாக வெறுப்புணர்வை திணிக்கலாம் சுன்னத்துக்களை பித்அத்தாகவும் பித்அத்துகளை சுன்னத்தாகவும் பலர் கருதுவதற்கு இதுவே காரணம் குர்ஆன் சுன்னாவை தவிர எந்த சிந்தனையும் வழிகேடு எனும் புதைகுழியில் தள்ளி விடும் மரணித்தவரின் தலைமாட்டில் மூடு மந்திரமாக ஓதுவதற்கு வழங்கப்பட்டது அல்ல திருக்குர்ஆன் உயிருடன் இருப்பவரின் சிந்தனையை செதுக்குவதற்கு வழங்கப்பட்ட வாழ்வியல் நெறியே திருக்குர்ஆன் இதயத்தில் ஒட்டாத திருக்குர்ஆன் வீட்டின் அலமாரிகளை அலங்கரிப்பதில் புண்ணியம் இல்லை சுன்னாவை எட்டாத சிந்தனை மறுமை வெற்றியை அணைக்கப்போவது இல்லை ...