மலகுல் மவ்த்

        நீ காணவிருக்கும் உருவம்
               *********************

ஏதோ ஒரு நாள்
ஏதோ ஒரு இடத்தில்
ஏதோ ஒரு உருவம் 

திடீரென 
உன் கண் முன்னே
அதிரடியாக வந்து நிற்கும்

உன்னை சுற்றியுள்ள எவருக்கும்
அந்த உருவம் கண்ணுக்கு தெரியாது
ஆனால் அந்த உருவத்தை 
நீ கண்ட நொடியில்
உலகில் வேறு எந்த உருவமும் 
உன் கண்ணுக்கு தெரியாது 

சுவாசிக்கும் மூச்சு உன்னுள் இருக்கும்
ஆனால் இயல்பாக செயல்படும் 
எந்த உறுப்புக்களும் உன்னில் 
நீ விரும்பினாலும்
செயல்படுத்த இயலாது 

உன் குரல்
அந்நிமிடம் ஊமையாகி விடும்
உன் கரமும் கால்களும்
செயலற்றுப்போய் விடும் 

அந்த உருவத்தின் பெயரே

 || மலகுல் மவ்த் ||

உன்னில் இருக்கும் உயிரை
நெய்யில் ஒட்டியுள்ள முடியை போல்
எளிதாக உருவி எடுப்பார்
நீ நல்லவனாக இருந்தால்


உன்னில் இருக்கும் உயிரை 
முள்ளில் சிக்கிய சேலை போல்
கிழித்து கடுமையாக இழுத்தெடுப்பார்
நீ தீயவனாக இருந்தால் 


இந்நிலை சந்திக்காது எவரும்
உலகை விட்டு பிரியவே முடியாது 

இந்நிலையை சந்திக்கும் முன்
உன்னை நீ தயார் படுத்திக்கொள் 

அந்த உருவத்தை நீ கண்ட நொடியே
கலிமாவை மொழிய தடுமாறி விடாதே

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 
தனது இறுதி நேரத்தில் மொழிந்த 
அழகான வார்த்தைகள்

அல்லாஹும்மஃக்பிர்லி 
அல்லாஹும்மர்ஹம்னி

வஅல்ஹிக்னி பிர்ரபீகில் அஃலா 

இறைவா என்னை மன்னிப்பாயாக
இறைவா எனக்கு அருள்புரிவாயாக
என்னை உயர்ந்த என் நண்பனுடன் 
( இறைவனிடம் ) இணைப்பாயாக

நூல் புகாரி 


قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏

உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும் (மலக்குல் மவ்து )உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் 

பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள் என்று (நபியே!) நீர் கூறும்

(அல்குர்ஆன் : 32:11)



       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           20-11-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்