திருமணம் செய்வோர் கவனத்திற்கு
திருமணம் செய்வோர் கவனத்திற்கு
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கட்டுரை எண் 1358
****************
விதவையை
திருமணம் செய்யலாமா
ஊனமானவரை
திருமணம் செய்யலாமா
வயதில் மூத்தவரை
திருமணம் செய்யலாமா
குடும்ப கட்டுப்பாடு செய்தவரை
திருமணம் செய்யலாமா
என்று பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்தில் உள்ளது
விதவையை திருமணம் செய்வது
சிறப்பானதா
ஊனமானவரை திருமணம் செய்வது
சிறப்பானதா
கைக்குழந்தையுடன் இருப்பவரை
திருமணம் செய்வது சிறப்பானதா
என்றும் பல சந்தேகங்களும் முஸ்லிம்
சமூகத்தி உள்ளது
யாரை திருமணம் செய்வது சிறந்தது என்று இஸ்லாம் விதிமுறைகளை வகுக்கவில்லை
மாறாக யாரை திருமணம் செய்வது வாழ்வுக்கு உவந்தது என்றும் மறுமை வெற்றிக்கு சிறந்தது என்றும் உடலியலுக்கு ஏற்றது என்றும்
இஸ்லாம் போதிக்கிறது
யாரை திருமணம் செய்தாலும்
அவர் மூலம் ஏற்படவிருக்கும் சங்கடங்கள் சிக்கல்களை சகிப்பேன் என்று மன உறுதியுடன் முஸ்லிமான யாரையும் திருமணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டு
ஆர்வக்கோளாரிலும் பிறர் கூறும் தவறான ஆலோசனைகளிலும் சிந்தனையை அடகு வைத்து திருமணம் செய்த பின் ஏற்படும் விரக்திகளுக்கு எவரையும் குற்றம் சுமத்துவதை இஸ்லாம் ஏற்காது
விதவைக்கு மறுவாழ்வு கொடுப்பதும்
பலதாரமணம் செய்வதும் இஸ்லாத்தில் வலியுருத்தப்பட்டது என்று சில அறிஞர்கள் தவறான கருத்தை மக்கள் மன்றத்தில் வைக்கின்றனர்
இரண்டாம் மணம் செய்யும் போது முதல்தாரத்திற்கு தகவல் தெரிவிக்காது திருமணம் செய்வதும் அனுமதிக்கப்பட்டது என்றும் சில அறிஞர்கள்
மக்கள் மன்றத்தில் தவறான கருத்தை நுழைத்துள்ளனர்
விதவைக்கு வாழ்வளிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதே தவிர வலியுருத்தப்பட்ட விசயம் அல்ல
பலதார மணம் செய்யும் சூழலிலும் பகிரங்கப்படுத்த வேண்டுமே தவிர மூடிமறைத்து செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை
ஒருவரின் சுமையை சுமப்பதற்கு வேறு ஒருவரின் உரிமையை அவர் அனுமதியின்றி சுருக்குவதையும் குறுக்குவதையும் மூடி மறைப்பதையும்
இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது
حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்
உங்கள் தாய்மார்களும்
உங்கள் புதல்வியரும்
உங்கள் சகோதரிகளும்
உங்கள் தந்தையின் சகோதரிகளும் உங்கள் தாயின் சகோதரிகளும் உங்கள் சகோதரனின் புதல்வியரும் உங்கள் சகோதரியின் புதல்வியரும் உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும்
உங்கள் பால்குடி சகோதரிகளும் உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்
அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால் அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர் அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை
உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது
இரண்டு சகோதரிகளை
(ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது இதற்கு முன் நடந்து விட்டவை தவிர
(அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 4:23)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
10-11-2024
Comments
Post a Comment