இன்ஷா அல்லாஹ்

               இன்ஷா அல்லாஹ்
             ஏன் எதற்கு எப்போது 
                ******************
                கட்டுரை எண் 1359
                     *************

எதிர்காலத்தை மட்டும் யோசித்து திட்டமிடுவதை விட நிகழ்காலத்தை உள்வாங்கி  செயல்படுவதே இறைநம்பிக்கை கொண்ட  முஸ்லிமுக்கு 
உவந்த நடவடிக்கையாகும்

இன்ஷா அல்லாஹ் 
எனும் சொல் உயிருடன் இருக்கும் ஒரு மனிதன்  உயிருடன் இருக்கும் நிலையில் இறைவனும் நாடினால் நாடிய  காரியத்தை செய்வேன் என்று கூறும்  ஆவலின் வாக்குறுதியே தவிர 
நாடிய காரியத்தை செய்தே தீருவேன் என்று உத்தரவாதம் தரும் வார்த்தைகள் அல்ல 
இன்ஷா அல்லாஹ் என்பது 


இன்ஷா அல்லாஹ் 
எதிர் வரும் ரமலான் மாதம் முதல் 
நான் தொழுவேன் என்று சொல்லுவதை விட 
இன்றைய தினம் அடையவிருக்கும் தொழுகைகளை இயன்றவரை நிறைவேற்றுவேன் என்று 
சபதம் எடுத்து நடைமுறைபடுத்துவதே
ஒரு முஸ்லிம் தனது சொல்லை 
தானே உரசிப்பார்க்கும் கருவியாக அமையும் 

இன்ஷா அல்லாஹ்
நான் உயிருடன் இருந்தால் வருங்காலத்தில் 
அதை செய்வேன் இதை செய்வேன் என்று உறுதிமொழி கொடுப்பதை விட 
நான் உயிருடன் இருக்கும் 
இந்நேரம் நான் இதை செய்து காட்டுவேன் என்று செயலுக்கு வடிவம் தருவதே மனிதனை நன்மைகளை செய்ய அதிகம்  தூண்டும்


இன்ஷா அல்லாஹ்
என்ற வார்த்தைக்கு அதிகபட்சமாக 
இஸ்லாம் வழங்கும் எல்லை 
நாளை என்ற நாளுக்கு மட்டுமே 

ஒரு நாளும் நாளை தான்
ஒரு வருடமும் நாளை தான்
நூறு வருடமும் நாளை தான்

ஆனால் அதிகபட்சமாக மனிதன் வாழ்நாளில் நெருக்கத்தில் இருப்பது நாளை என்ற வட்டத்திற்குள் 
மட்டுமே அடங்கும் என்பதையே அறிய முடிகிறது



وَلَا تَقُوْلَنَّ لِشَا۟ىْءٍ اِنِّىْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۙ‏اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌

(நபியே!) 
எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலே தவிர நிச்சயமாக நான் நாளை 
அதைச் செய்வேன் என கூறாதீர்கள்

(அல்குர்ஆன் : 18:23)

அல்லாஹ் நாடினால் தான் 
எதுவும் நடக்கும் என்பது உறுதியாக இருப்பினும் 


இறைவா நீ நாடினால் 
என்னை மன்னிப்பாயாக
நீ நாடினால் எனக்கு கருணை செய்வாயாக என்று பிரார்த்தனை செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது 




حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال

 لا يَقُلْ أَحَدُكُمُ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ

சுருங்க சொன்னால்
சாத்தியக்ககூறுகள் இருக்கும் பட்சத்தில் 
ஒரு காரியத்தை செய்ய முடிவு செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனும் வார்த்தையை பயன்படுத்துவதே பொருத்தமானது 

சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில் 
பிறரை சமாதானம் செய்யும் வார்த்தையாக மட்டுமே பலரால்  இன்ஷா அல்லாஹ் எனும் சொல் உபயோகிக்கப்படுகிறது 

எண்ணங்களை தூய்மை படுத்துவோம்
அதன் வண்ணங்களை நடைமுறைப்படுத்துவோம் இனிதே
இன்ஷா அல்லாஹ்


      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            16-11-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்