Posts

Showing posts from October, 2023

பாலஸ்தீனம்

          உளவியலுக்கு ஊக்கம் தரும்                        பாலஸ்தீனம்                  ******************** அனுதினமும்  சோதனைகள் வேதனைகள்  இழப்புகள் இரத்தக்காட்சிகள்  சிதைந்து போன மனித உடல்கள் துண்டாக்கப்பட்ட குழந்தைகள் அன்றாடம் ஜனாஸா தொழுகைகள் பட்டினிப்போராட்டங்கள் போர் முரசுகள் இதுவே பாலஸ்தீன மக்களின்  தற்போதைய நிலை  இது  போன்ற சூழ்நிலையை  உலகில் எந்த சமூகத்தில் நீங்கள் கண்டாலும்  அங்கே நீங்கள் காணக்கூடியது  புலம்பல்கள்  தற்கொலைகள்  கதறல்கள் கடவுள் இருக்கின்றானா கடவுளுக்கு கண் இல்லையா கடவுளுக்கு இரக்கம் இல்லையா கடவுள் குருடனா  கடவுள் செவிடனா  என்ற மரண ஓலங்களும் ஒப்பாரிகளும்  மிகைத்திருக்கும்   ஆனால் பாலஸ்தீன மக்களிடம்  அரும்பு மீசை முளைக்காத குழந்தைகளிடம்  முதியோர்களிடம்  குறிப்பாக தாய்மார்களிடம்  வெளிப்படும் வார்த்தைகளோ வியப்பில் ஆழ்த்தும் வார்த்தைகள் திருமறை குர்ஆன் வசனங்கள்  அல்லாஹ் ஹஸ்புனல்லாஹ்  என்ற ஈமானிய வார்த்தைகள்  ரீங்காரமாய் கேட்டுக்கொண்டே  இருக்கின்றது  உலக தொலைக்காட்சிகள் அவர்களை அறியாமலேயே பாலஸ்தீன மக்களின் ஈமானிய வார்த்தைகளை உலகிற்கு  அன்றாடம் வெளிப்படுத்துகின்றனர் இதன்

உயர்சாதி

உயர்சாதி மேல்சாதி                ****************** பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு  என்று பிற மனிதனை கீழ்சாதியாக கருதும் எவனும்               !! தீட்டு பார்க்காத ஒன்று பணம் !! பிச்சைக்காரன் தொட்டு கொடுத்த பணத்தையும் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி  தொட்டு கொடுத்த பணத்தையும்  நாவிதன் சிரைத்து உழைத்து  தொட்டு கொடுத்த பணத்தையும் எவ்வித பாகுபாடும் இல்லாது  பூஜை அறையில் புனிதமாக பாதுகாப்பாக  வைப்பான்  உயர்சாதிக்காரன் என்று தன்னை நினைப்பவனை விட உலகில் உயர்ந்து  இருப்பது தொழிலாளியால்   அச்சடிக்கப்பட்ட பணமே பிறக்கும் நேரம் பணத்துடன் எவனும்  பிறப்பது இல்லை இறக்கும் நேரம் பணத்தை எவனும்  உடன் எடுத்துச்செல்வதும் இல்லை  செத்தப்பிணமாக மாறும் எந்த பிணத்தையும் வேறுபடுத்தி ஆகாயத்தில் மிதக்க வைப்பதும் இல்லை  பிறகோள்களில்  விஷேசமாக அடக்கப்படுவதும் இல்லை மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் மனிதர்களில் மனிதநேயத்துடன் எவன் நடக்கிறானோ  அவனே உயர்சாதி பண்பாடுகளில் எவன்  சிறந்து விளங்குகிறானோ அவனே உயர்சாதி ஒழுக்கத்தில் எவன் பிரகாசிக்கிறானோ  அவனே உயர்சாதி இறையச்சத்தில் எவன் மிளிர்கிறோனோ  அவனே இவர்க

பாலஸ்தீனம் இஸ்ரேல்

           பாலஸ்தீனம் இஸ்ரேல்                 ***************** உலகமே உணர்வுப்பூர்வமாக பேசும் விசயத்தில் சட்டப்பூர்வமாக கருத்து சொல்வது பயனற்றுப்போகும் கொந்தளிப்பை உருவாக்கிய விசயத்தில் தீர்வு சொல்வதற்கு  சட்ட எழுத்துக்களை படிக்க  கண்ணில் கண்ணாடியை அணிந்தால் மட்டும் போதாது  மாறாக சூழ்நிலையை உற்று நோக்கும் தொலைதூரக்கருவியை பயன்படுத்த வேண்டும்  பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீன மக்கள் உலகரங்கில்   தீர்வை தேடவில்லை  மாறாக நியாயத்தையும் மனிதாபிமானத்தையுமே எதிர்பார்க்கின்றனர்  இது குற்றம் இல்லை  காரணம் அந்தளவு இழப்பை சந்தித்தவர்கள் தியாகம் செய்தவர்கள் மனிதநேயத்துடன் யூத  நாடோடிகளுக்கு பல்லாண்டுகளாக கரம் கொடுத்து தங்கள் நாட்டில் நாடோடிகளுக்கு வாழ்வதற்கு இடமளித்து  அரவணைத்து கொண்டவர்கள்  அரவணைக்கப்பட்ட யூதர்களே நன்றி மறந்து அரவணைத்தவர்களை அவர்களின்  நாட்டை விட்டு வெளியேற்ற துடிக்கும் பொழுது அக்கிரமத்தை கிளப்பியவர்களுக்கு உலகின் அதிகாரம் படைத்தவர்களே உறுதுணையாக செயல்படும் பொழுது அதன் மூலம் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது பாலஸ்தீன மக்களுக்கு வரும் வரவுகள் முடக்கப்படும் பொழுது  நாடோ

சமுதாய புலம்பலும் சாத்தியமற்ற சிந்தனையும்

                 சமுதாய புலம்பலும்          சாத்தியமற்ற சிந்தனையும்                          ************                  கட்டுரை எண் 1500                         *********** எத்தனை முறை உபதேசம் செய்தாலும் சில உபதேசங்கள் மக்களின் மனநிலையை மாற்றுவது இல்லை  மக்களும் அதன் மூலம் மனநிலையை மாற்றிக்கொள்ள தயாரில்லை  அதில் ஒன்று முஸ்லிம் சமூகத்தின்           !!  ஒற்றுமை கோஷம் !! சமூகவலைத்தளங்களில் அடிக்கடி  இந்த புலம்பல்களை காண முடியும்   அறிவும் லட்சியங்களும் கொள்கைகளும் மாறுபட்டிருக்கும் நிலையில் ஒற்றுமை சாத்தியமா என்று கடுகளவும் இவர்கள்  சிந்திப்பது இல்லை  சில வேளை சமூக தலைவர்கள் ஒன்றினைந்தாலும் அனைத்து மக்களும் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என்றும் இவர்கள் சிந்திப்பது இல்லை  ஒற்றுமை கோஷம் போடுபவர்களும் அவர்கள் சரி காணும் அணியை நோக்கியே அனைவரும் திரும்ப வேண்டும் என்று நினைப்பார்கள் என்றும் இவர்கள் சிந்திப்பது இல்லை  ஒற்றுமை கோஷத்தை விரும்புபவரும் அவர் விரும்பும் தலைவரை நோக்கியே பயணம் செய்வார்  என்றும் இவர்கள் சிந்திப்பது இல்லை  நூறு முஸ்லிம் குடும்பங்கள் வாழும் சிறு கிராமத்தில் கூட பள்ளிவாசல்க

சமூக கவலை

                       சமூக கவலை                          ********** முஸ்லிம் சமூகத்தில் பிறந்து  இஸ்லாத்தின் கண்ணியத்தை  பேணாது உலக மோகத்தில் சீரழியும் ஜென்மங்களை கண்டு கடுகளவும் வருந்த வேண்டிய அவசியம் இல்லை அவர்களின் பெற்றோர்களே  மக்களின் சீரழிவை பெருமையாக உரிமையாக  கருதும் நிலையில் அவர்களின் சீரழிவுக்கு இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள் வருந்த வேண்டிய அவசியம் என்ன ? நேர்வழியில் செல்பவர்கள் வாழ்வில் என்றும் கேவலத்தை அடைந்தது இல்லை   வழிகேடுகளை சுதந்திரமாக  நேசிப்பவர்கள் வாழ்வில் அடிபடாது திருந்துவதும் இல்லை  வருங்காலம் இன்னும் இதை விட மோசமான சூழ்நிலைகளையே வெளிப்படுத்தும்  கவர்ச்சி நடிகைகளே தனது இழிவான செயலை வெறுத்து மனம் திருந்தி மீண்டு வரும் நிலையில் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய கழிசடை இடத்தை பூர்த்தி செய்ய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்களும் தடம் மாறிச்செல்வதை தடுக்க முடியாது  அதிகபட்சமாக முஸ்லிம் ஜமாத்துகள் வழிகேடுகளை சுதந்திரமாக கருதி சீரழியும் நபர்களை ஒதுக்கி வைப்பதே முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஜமாத்துகள்  அவர்களுக்கு கரம் கொடுப்பதால் அவர்களும் திருந்துவதற்

பித்அத்துகளும் பின்னனிகளும்

     பித்அத்துகளும் பின்னனிகளும்                  ******************* பித்அத்துகளை கண்டிப்பதற்கு கடமைப்பட்ட பல முஸ்லிம்கள் பித்அத்துகளை கண்டிப்பவர்களை கண்டிப்பதில் ஆனந்தம் அடைகின்றனர்  சுன்னத்துகளை ஏளனம் செய்து பித்அத்துகளை நிலைநாட்ட பாடுபடுகின்றனர்   இதற்கு அடிப்படை காரணம்  1 முன்னோர்கள் மீது ஏற்பட்டுள்ள    குருட்டு பக்தி 2 மார்க்க அறிஞர்கள் மீது வைத்துள்ள   குருட்டு நம்பிக்கை  3 பிறர் மீது ஏற்பட்டுள்ள ஈகோ எனும்    தீயகுணம்   4 மார்க்க ஞானத்தின் குறைபாடு 5 நபிவழியின் மீதுள்ள    அக்கரையின்மை  6 குடும்பம் ஜமாத்துகளின் நிர்பந்தம் 7 பித்அத்துகளை     சுட்டிக்காட்டுவோரின் கடினப்போக்கு  இதில் எதுவாக இருப்பினும் பித்அத்துகளை நடைமுறைபடுத்தும் நபர்கள் மறுமையில் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை  وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ‏ மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர்