பாலஸ்தீனம்

          உளவியலுக்கு ஊக்கம் தரும்
                       பாலஸ்தீனம்
                 ********************

அனுதினமும் 
சோதனைகள் வேதனைகள்
 இழப்புகள் இரத்தக்காட்சிகள் 
சிதைந்து போன மனித உடல்கள்
துண்டாக்கப்பட்ட குழந்தைகள்
அன்றாடம் ஜனாஸா தொழுகைகள்
பட்டினிப்போராட்டங்கள்
போர் முரசுகள்

இதுவே பாலஸ்தீன மக்களின்  தற்போதைய நிலை 

இது  போன்ற சூழ்நிலையை 
உலகில் எந்த சமூகத்தில் நீங்கள் கண்டாலும் 
அங்கே நீங்கள் காணக்கூடியது 

புலம்பல்கள் 
தற்கொலைகள் 
கதறல்கள்
கடவுள் இருக்கின்றானா
கடவுளுக்கு கண் இல்லையா
கடவுளுக்கு இரக்கம் இல்லையா
கடவுள் குருடனா 
கடவுள் செவிடனா 
என்ற மரண ஓலங்களும் ஒப்பாரிகளும்  மிகைத்திருக்கும்  

ஆனால் பாலஸ்தீன மக்களிடம் 
அரும்பு மீசை முளைக்காத குழந்தைகளிடம் 
முதியோர்களிடம் 
குறிப்பாக தாய்மார்களிடம் 
வெளிப்படும் வார்த்தைகளோ
வியப்பில் ஆழ்த்தும் வார்த்தைகள்

திருமறை குர்ஆன் வசனங்கள் 
அல்லாஹ் ஹஸ்புனல்லாஹ் 
என்ற ஈமானிய வார்த்தைகள் 
ரீங்காரமாய் கேட்டுக்கொண்டே 
இருக்கின்றது 

உலக தொலைக்காட்சிகள்
அவர்களை அறியாமலேயே பாலஸ்தீன மக்களின் ஈமானிய வார்த்தைகளை உலகிற்கு 
அன்றாடம் வெளிப்படுத்துகின்றனர்

இதன் மூலம் இதர சமூகம் படிப்பினை பெறுகிறார்களோ இல்லையோ 
முஸ்லிம்கள் உலக வாழ்வில்  படிப்பினை 
பெற வேண்டும்  

அர்ப்பமான  இழப்புகளுக்கே
மனம் உடைந்து ஈமான் சிதைந்து 
இணை வைப்பு காரியங்கள்
சர்வசாதாரணமாக தென்படுகிறது 

உலக மோகமும்
மறுமை வாழ்கையும்
மனதில் முன்னனி வகித்தால் 
எந்த துன்பங்களும்
முஸ்லிம்களின் மனதை தடுமாறச்செய்யாது 


மரணம் 
உடல் மக்கிப்போவதற்கு அல்ல
மறுமை நாளில் மகிழ்வுடன் நிரந்தரமாய் வாழ்வதற்கே 




وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு (நபியே!) 
நீர் நன்மாராயங் கூறுவீராக


الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏

(பொறுமை பேணும் ) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்


اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன
இன்னும் அவர்கள்  நேர் வழியை அடைந்தவர்கள்




         (அல்குர்ஆன் : 2:155,156,157 )



     நட்புடன் J.  யாஸீன் இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்