பித்அத்துகளும் பின்னனிகளும்
பித்அத்துகளும் பின்னனிகளும்
*******************
பித்அத்துகளை கண்டிப்பதற்கு கடமைப்பட்ட பல முஸ்லிம்கள் பித்அத்துகளை கண்டிப்பவர்களை கண்டிப்பதில் ஆனந்தம் அடைகின்றனர்
சுன்னத்துகளை ஏளனம் செய்து பித்அத்துகளை நிலைநாட்ட பாடுபடுகின்றனர்
இதற்கு அடிப்படை காரணம்
1 முன்னோர்கள் மீது ஏற்பட்டுள்ள
குருட்டு பக்தி
2 மார்க்க அறிஞர்கள் மீது வைத்துள்ள
குருட்டு நம்பிக்கை
3 பிறர் மீது ஏற்பட்டுள்ள ஈகோ எனும்
தீயகுணம்
4 மார்க்க ஞானத்தின் குறைபாடு
5 நபிவழியின் மீதுள்ள
அக்கரையின்மை
6 குடும்பம் ஜமாத்துகளின் நிர்பந்தம்
7 பித்அத்துகளை
சுட்டிக்காட்டுவோரின் கடினப்போக்கு
இதில் எதுவாக இருப்பினும் பித்அத்துகளை நடைமுறைபடுத்தும் நபர்கள் மறுமையில் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை
وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ
மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கிறார்கள்
(அல்குர்ஆன் : 24:48)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment