பாலஸ்தீனம் இஸ்ரேல்
பாலஸ்தீனம் இஸ்ரேல்
*****************
உலகமே உணர்வுப்பூர்வமாக பேசும் விசயத்தில் சட்டப்பூர்வமாக கருத்து சொல்வது பயனற்றுப்போகும்
கொந்தளிப்பை உருவாக்கிய விசயத்தில் தீர்வு சொல்வதற்கு
சட்ட எழுத்துக்களை படிக்க கண்ணில் கண்ணாடியை அணிந்தால் மட்டும் போதாது
மாறாக சூழ்நிலையை உற்று நோக்கும் தொலைதூரக்கருவியை பயன்படுத்த வேண்டும்
பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீன மக்கள் உலகரங்கில் தீர்வை தேடவில்லை
மாறாக நியாயத்தையும் மனிதாபிமானத்தையுமே எதிர்பார்க்கின்றனர்
இது குற்றம் இல்லை
காரணம் அந்தளவு இழப்பை சந்தித்தவர்கள் தியாகம் செய்தவர்கள் மனிதநேயத்துடன் யூத நாடோடிகளுக்கு பல்லாண்டுகளாக கரம் கொடுத்து தங்கள் நாட்டில் நாடோடிகளுக்கு வாழ்வதற்கு இடமளித்து அரவணைத்து கொண்டவர்கள்
அரவணைக்கப்பட்ட யூதர்களே நன்றி மறந்து அரவணைத்தவர்களை அவர்களின் நாட்டை விட்டு வெளியேற்ற துடிக்கும் பொழுது அக்கிரமத்தை கிளப்பியவர்களுக்கு உலகின் அதிகாரம் படைத்தவர்களே உறுதுணையாக செயல்படும் பொழுது அதன் மூலம் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது பாலஸ்தீன மக்களுக்கு வரும் வரவுகள் முடக்கப்படும் பொழுது நாடோடிகளை அரவணைத்து தஞ்சம் கொடுத்தவர்கள் கொதித்தெழுவது உலகப்பார்வையில் குற்றம் இல்லை
எதிர் நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியல் போட்டு பாலஸ்தீன மக்களை விமர்சிக்கும் நபர்கள்
எதிர் நடவடிக்கையை தூண்டியவர்கள் யார் ? தூபம் போட்டவர்கள் யார் ? இன்று வரை அதன் மூலம் குளிர்காய்வது யார் என்பதை உற்று நோக்காது இருப்பது அவர்களின் அறிவின் குறைப்பாடு
உலக வரைபடத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன் இஸ்ரேல் என்ற பெயரில் இடம் இருந்தது இல்லை
ஆனால் தற்போது இஸ்ரேல் என்ற பெயர் கொண்ட இடம் பாலஸ்தீனத்தின் பகுதியாகவே நெடுங்காலம் இருந்து வந்துள்ளது
சிந்தனையை இதில் இருந்து துவக்காது பாலஸ்தீனம் இஸ்ரேல் என்ற இரு கோட்டில் இருந்து துவக்கினால் நிச்சயம் இதற்கு எவராலும் தீர்வு வழங்க இயலாது
யுத்தங்களும் இரத்தங்களும் தான் நீடிக்கும்
உலகில் போடும் ஒப்பாரி சப்தங்கள் நிசப்தம் அடையாது
பாலஸ்தீன மக்கள் தனிநாடு கேட்டு போராடவில்லை
மாறாக தன் நாட்டை தற்காத்துக்கொள்ளவே போராடுகின்றனர்
தீவிரவாதத்தை தூண்ட போராடவில்லை
மாறாக ஏற்ப்படுத்தப்பட்ட
தீராத வலியின் வேதனையால் துடிக்கின்றனர்
இறைத்தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டு ஆட்டுக்கறியில் நஞ்சு வைத்ததும் யூத இனத்தை சார்ந்த பெண்மணி தான்
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நெருங்கி பணிவிடை செய்யும் நபர்களில் ஒருவராக இருந்தவரும் யூத இனத்தை சார்ந்தவர் தான்
இஸ்லாமிய வரலாற்றில் இது போல் சான்றுகள் ஏராளம் உண்டு
கொள்கையால் மாறுபட்டவர்களை படுகொலை செய்ய இஸ்லாம் தூண்டவில்லை
கொள்கையால் வேறுபட்டவர்களை வெறுத்து ஒதுக்க இஸ்லாம் போதிக்கவில்லை
பாலஸ்தீன் இஸ்ரேல் பகுதியில் அமைதி ஏற்படவும்
முஸ்லிம்கள் யூதர்கள் மத்தியில் நல்லிணெக்கம் ஏற்படவும்
மனிதாபிமானம் நிலைக்கவும்
அநீதம் இழைப்போர் திருந்தவும்
திருத்தப்படவும்
திருந்தாத ஜென்மங்கள் தண்டிக்கப்படவும் இறைவனிடம் பிராத்திப்போம்
உலக நாடுகளை நியாயத்தின் பக்கம் திரும்ப நிர்பந்திப்போம்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
9-10-2023
Comments
Post a Comment