சமூக கவலை
சமூக கவலை
**********
முஸ்லிம் சமூகத்தில் பிறந்து
இஸ்லாத்தின் கண்ணியத்தை பேணாது உலக மோகத்தில் சீரழியும் ஜென்மங்களை கண்டு கடுகளவும் வருந்த வேண்டிய அவசியம் இல்லை
அவர்களின் பெற்றோர்களே
மக்களின் சீரழிவை பெருமையாக உரிமையாக கருதும் நிலையில் அவர்களின் சீரழிவுக்கு இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள் வருந்த வேண்டிய அவசியம் என்ன ?
நேர்வழியில் செல்பவர்கள் வாழ்வில் என்றும் கேவலத்தை அடைந்தது இல்லை
வழிகேடுகளை சுதந்திரமாக நேசிப்பவர்கள் வாழ்வில் அடிபடாது திருந்துவதும் இல்லை
வருங்காலம் இன்னும் இதை விட மோசமான சூழ்நிலைகளையே வெளிப்படுத்தும்
கவர்ச்சி நடிகைகளே தனது இழிவான செயலை வெறுத்து மனம் திருந்தி மீண்டு வரும் நிலையில் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய கழிசடை இடத்தை பூர்த்தி செய்ய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்களும் தடம் மாறிச்செல்வதை தடுக்க முடியாது
அதிகபட்சமாக முஸ்லிம் ஜமாத்துகள்
வழிகேடுகளை சுதந்திரமாக கருதி சீரழியும் நபர்களை ஒதுக்கி வைப்பதே முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஜமாத்துகள் அவர்களுக்கு கரம் கொடுப்பதால் அவர்களும் திருந்துவதற்கு முயற்சிப்பது இல்லை
காமக்களியாட்டங்களில் மிதக்கும் ஜென்மங்களை பாதுகாப்பது எப்படி என்று சிந்திப்பதை விட
காம வலையில் விழாது கட்டுக்கோப்பாக வாழும் இளைய தலைமுறையை எவ்வாறு கரை சேர்ப்பது என்று ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்
قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰى نَـفْسِىْ وَاِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوْحِىْۤ اِلَىَّ رَبِّىْ اِنَّهٗ سَمِيْعٌ قَرِيْبٌ
கூறுவீராக
நான் வழிகெட்டால் அந்த வழிகேடு எனக்கே நஷ்டமாகும்
நான் நேர்வழியில் சென்றால் (அது) என்னுடைய இறைவன் எனக்கு வழங்கிய நேர்வழியாகும்
நிச்சயமாக அவன் (மிகச்) செவியேற்பவன்
(மிக) நெருங்கியிருப்பவன்
(அல்குர்ஆன் : 34:50)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment