சமுதாய புலம்பலும் சாத்தியமற்ற சிந்தனையும்
சமுதாய புலம்பலும்
சாத்தியமற்ற சிந்தனையும்
************
கட்டுரை எண் 1500
***********
எத்தனை முறை உபதேசம் செய்தாலும் சில உபதேசங்கள் மக்களின் மனநிலையை மாற்றுவது இல்லை
மக்களும் அதன் மூலம் மனநிலையை மாற்றிக்கொள்ள தயாரில்லை
அதில் ஒன்று முஸ்லிம் சமூகத்தின்
!! ஒற்றுமை கோஷம் !!
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி
இந்த புலம்பல்களை காண முடியும்
அறிவும் லட்சியங்களும் கொள்கைகளும் மாறுபட்டிருக்கும் நிலையில் ஒற்றுமை சாத்தியமா என்று கடுகளவும் இவர்கள்
சிந்திப்பது இல்லை
சில வேளை சமூக தலைவர்கள் ஒன்றினைந்தாலும் அனைத்து மக்களும் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என்றும் இவர்கள் சிந்திப்பது இல்லை
ஒற்றுமை கோஷம் போடுபவர்களும் அவர்கள் சரி காணும் அணியை நோக்கியே அனைவரும் திரும்ப வேண்டும் என்று நினைப்பார்கள் என்றும் இவர்கள் சிந்திப்பது இல்லை
ஒற்றுமை கோஷத்தை விரும்புபவரும் அவர் விரும்பும் தலைவரை நோக்கியே பயணம் செய்வார் என்றும் இவர்கள் சிந்திப்பது இல்லை
நூறு முஸ்லிம் குடும்பங்கள் வாழும் சிறு கிராமத்தில் கூட பள்ளிவாசல்கள் இரண்டு
ஒரே பள்ளியின் ஜமாத் தொழுகை வரிசையில் தொழுகும் முறையோ நான்கு
ஒரே நிர்வாகத்தில் இரு புற பிரிவு பூசல்கள் வழக்குகள்
இதைத்தாண்டி ஒரே குடும்பத்தில்
பல கருத்து வேறுபாடுகள்
இப்படி எண்ணற்ற பிரிவுகளை எளிமையாக கடந்து செல்லும் முஸ்லிம்கள் அடிக்கடி சமூக ஒற்றுமையை அறிக்கையாக போட்டு புலம்புவது வேடிக்கையானது
ஏதோ முஸ்லிம் சமூகத்தில் மட்டும்
பல பிரிவுகள் அமைப்புகள் இருப்பது போலவும் ஏனைய சமூகத்தவர்கள் ஒருவருக்கொருவர் பாசத்தால் கட்டி புரண்டு கொண்டிருப்பது போலவும் ஆழமான ஓர் மனபிரம்மையில் புலம்பி திரிகின்றனர்
சமூகத்தை மறுமை வெற்றியை நோக்கி அழைப்பது தான் கடமையே தவிர கொள்கை கடந்து போலித்தனமான ஒற்றுமையை நோக்கி அழைப்பது கடமையும் இல்லை அது சாத்தியமும் இல்லை
முஸ்லிம் சமூகம் பிரிந்து இருப்பதால் தான் இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று எதையும் சுட்டிக்காட்ட இயலாது
அரசின் நடவடிகைகள் மக்களின் எண்ணிக்கையை மையமாக வைத்து உருவாக்கப்படுமே தவிர
இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து உருவாக்கப்படுவது இல்லை
பிரிவுகளாக இயங்கினாலும் பொதுவான விசயங்களுக்கு அவர்களால் இயன்றளவு குரல் கொடுக்கிறார்களா என்று மாத்திரம் பார்ப்பது போதுமானது
அவ்வகையில் பொதுவான விசயங்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய இயக்கங்களும் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் அவர்களின் சக்திக்கு உட்பட்டு
குரல் கொடுத்து கொண்டு தான் உள்ளனர்
நீங்களும் இயன்றால் குரல் கொடுங்கள் அல்லது சாத்தியமற்ற இந்த புலம்பலை தூக்கி எறியுங்கள்
உங்களுக்கு இது தத்துவமாக தோன்றலாம்
மார்க்க ஞானத்துடனும் நடைமுறை உண்மைகளுடனும் ஒப்பிட்டு கவனிப்போருக்கு இது வெற்றுப்புலம்பலாக மட்டுமே தென்படும்
சமூகத்தை ஓரணியில் திரட்டுவோம் என்ற பெயரில் தான்
முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் அனைத்து அணிகளும் உருவாக்கப்பட்டது
அவ்வாறு உருவாக்கப்படும் அணிகளே
முஸ்லிம் சமூகத்தின் புதிய பிரிவுக்கு வழிவகுக்கவும் செய்துள்ளது
இந்நிலை இன்னும் தொடரும்
இதற்கு முற்றும் இல்லை
இது தவறும் இல்லை
கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதும்
கொள்கைவாதிகள் தடுமாற்றம் அடையும் போது மாறிச்செல்வதும்
மாற்றிச்செல்வதும் மனிதனின் சிறப்பான இயல்பு
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment