Posts

Showing posts from April, 2021

அணுகுமுறையை அழகாக்குவீர்

   அணுகுமுறையை அழகாக்குவீர்                   ****************            கட்டுரை எண் 1409                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= தவறு செய்யும் மனிதனை திருத்துவதாக இருந்தாலும் அம்மனிதனின் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தாது அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தாது தனிமையில்  சுட்டி காட்டினால் மட்டுமே அம்மனிதன் அச்சொல்லை சிந்திப்பான் இதை தவிர்த்து அராஜகத்தை கையில் எடுத்து அநாகரீகமான வழிமுறைகளை கையாண்டால் அதனால் பாதிப்பை சந்திப்பவன் பொறுமை உடைய மனிதனாக இருந்தாலும் திடீரென பொங்கி எழும் நிலை ஏற்படும் பொருளியல் பலத்தில் குன்றியவனாக இருந்தாலும் அவனது எதிர்ப்பை சமாளிக்க இயலாத சூழ்நிலையை நிச்சயம்  சந்திக்க நேரிடும் உலவியல் ரீதியாக பல சிரமத்தை அனுபவிக்க நேரிடும் காரணம் அநீதமாக  பாதிக்கப்பட்டவனின் பக்கமே இறைவனின் கருணையும் உதவியும் மறைமுகமாக இருக்கும் இதை கருத்தில் கொண்டு வாழ்வியலை அமைப்போம் இன்ஷா அல்லாஹ் يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْ

காவிகளை இழிவு படுத்திய கொரோனா

    கொரோனாவால் இழிவடைந்த                         காவிகள்                    ****************            கட்டுரை எண் 1408                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= நாய்களை நாயாக பார்ப்பதும் நோய்களை நோயாக பார்ப்பதும் பகுத்தறிவு பெற்றுள்ள மனிதனின் தன்மை ஆனால் நோய்களுக்கும் கூட மத சாயம் பூசி  பார்க்கும் ஒரே இனம் காவிகள் சென்ற வருட கொரோனா முதல் அலை வீசி பல்லாயிர உயிர்கள் பறி போன நேரத்தில் அரசாங்க முன் அனுமதி பெற்று நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் ( தப்லீக் ஜமாத்)  தான் கொரோனாவை இந்தியா முழுவதும் பரப்பினார்கள் என்று அறிவீனமாக கொக்கரித்தார்கள் அந்த கொக்கரிப்பை உண்மை என்று சித்தரித்து தினமும்  தலைப்பு செய்தியாக  போட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ( பத்திரிக்கை) ஊடக பைத்தியங்கள் பரப்பி மகிழ்சி அடைந்தனர் வைரஸ் பற்றிய துளியளவு பொது அறிவு இல்லாத மக்கள்  இந்த கடைந்தெடுத்த பொய்யை உண்மையாக நினைத்தனர் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அவர்களின் பிதற்றலுக்கு சாவு மணி அடித்து சமூகத்தில் அவர்களை நாற வைத்துள்ளது

தராவீஹ் ஹாபிளும் மக்களும்

         தராவீஹ் ஹாபிள்களும்             மக்களின் நிலையும்                   ****************            கட்டுரை எண் 1407                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= இரவு தொழுகையில் ஹாபிள்களை (குர்ஆன் மனனம் செய்தோரை) இமாமாக  நியமிப்பது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்ற போதும் பரவலாக ஹாபிள்களை ஏற்பாடு செய்வது நடைமுறையில் காண முடிகிறது ஆனால் இந்த ஏற்பாடுக்கு மதிப்பளிக்க கடமைபட்ட மக்களின் நிலை எவ்வாறு உள்ளது  ? ஹாபிள் முதல் ரக்அத்தில் சூரா ஓதி முடித்து ருகூஃ போகும் வரை அமர்ந்திருந்து அதன் பிறகே அநேக மக்கள் ஜமாத்தில் இணையும் நிலையை தான் அதிகமாக காண முடிகிறது இன்னும் பலர் இரவு தொழுகையின் இறுதி தொழுகை வரும் வரை தாமதித்து அதன் பிறகு விடுபட்ட தொழுகையை அவசர அவசரமாக தனியாக தொழுது விட்டு ஹாபிள் தொழ வைக்கும் இறுதி இரு ரக்அத்தில் பங்கு பெறும் சூழ்நிலையை தான்  காண முடிகிறது இதற்கான காரணம் என்ன ? ஹாபிள்கள் நீண்ட நேரம் தொழுகையில்  ஓதுவது அவர்களுக்கு சிரமத்தை தருவதாக கருதுகின்றனர் சடங்கிற்காக வழிபாடுகளை செய்யாது மறுமை வெற்றிக்காக மனமு

தராவீஹ்

          ( தராவீஹ் தொழுகை )               இரவு தொழுகை       செய்தியும் சிந்தனையும்                    ****************            கட்டுரை எண் 1406                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= எடுத்து வைக்கும் வாதங்களுக்கு யார் முறையான ஆதாரங்களை சமர்பிக்கவில்லையோ அதை ஒட்டி எழுப்பப்படும் எதிர் கேள்விகளுக்கு யார் தெளிவான மறுப்பை  தரவில்லையோ அவர்கள் நாடறிந்த அறிஞர்களாக வல்லுனர்களாக இருந்தாலும் அவர்களின் கூற்று முற்றிலும் மார்க்க பார்வையில் தவறானதே  இதுவும் சரி அதுவும் சரி என்பதற்கு சில விதிவிலக்கை தவிர வேறு எதற்கும் இஸ்லாத்தில் இரு பதில்கள் இல்லை இதுவே சரி என்பதே இஸ்லாத்தின் ஆணி வேர் தனித்துவம் ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் நடைமுறை படுத்திய  சுன்னத்தான ( இரவு)  தொழுகையின் எண்ணிக்கை         எட்டு ரக்அத்துகளா  ?       இருபது ரக்அத்துகளா ? என்று கேட்டால் அதற்கு ஒரு பதில் தான் கூறப்பட வேண்டும் விரும்பியவர் தொழுகலாம் விரும்பாதோர் விட்டு விடலாம் நபிலாக நினைத்து தொழுகலாம் நன்மையை நாடி தொழுகலாம் என்று ஒருவர்  பதில் க

கொரோனா தடுப்பூசி

          கொரோனா தடுப்பூசி                          ********           J . YASEEN IMTHADHI                     *************                        17-04-2021                             ***** நாட்டு மக்களுக்கு கொரோனா தொற்று மீதுள்ள அச்சத்தை விட அதற்கான தடுப்பூசியை போட்டு கொள்வதில் அதிகமான அச்சம் நிலவுகிறது காரணம் தடுப்பூசியை பற்றி உலவும் வதந்தி  செய்திகள் ஒரு புறம் இருந்தாலும் தடுப்பூசியை வலியுருத்தும் அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டு கொள்வது போல் போலியாக தங்களை சித்தரித்து காட்டி கொண்ட காணொளிகள் வெளியானதும் தடுப்பூசியை போட்டு கொண்ட பின் சிலர் அடைந்த மரணங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட நடிகர் விவேக் திடீரென  மரணத்தை தழுவியதும் நாட்டு மக்களுக்கு மேலும் தடுப்பூசியின் மீது அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது இந்நிலையில் தொலைகாட்சிகள் வழமை போல் கொரோனா அச்சத்தையும் பீதியையும் தலைப்பு செய்தியாக போடுவதில் தான் அறிவீனமாக செயல் படுகிறது மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி அந்த மரணத்தை விரைவாக கொண்டு வரும் என்ற நாட்டு மக்களின் 

ரமலானும் குர்ஆனும்

           ரமலான் மாதத்தில் நன்மைகளை குவிக்க ஆசையா              J . YASEEN IMTHADHI                     *************                        15-04-2021                             ***** ரமலான் மாதம் தினமும் 222 வசனங்களை பார்த்து ஓதினாலே ரமலான் மாதம் நிறைவடையும் போது முழு குர்ஆனையும் ஒரு முறை  ஓதி முடித்து விட முடியும் மார்க்க உரைகளை தினமும் இரண்டு மணி நேரம் கேட்க நேரத்தை ஒதுக்குவதற்கு  பதில் குர்ஆனின்  222 வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதி முடிக்க இயலும் திருக்குர்ஆனின் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்பது நபிமொழி ரமலான் அல்லாத நாட்களில் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்றால் இறைவன்  நன்மைகளை வாரி வழங்க தயாராக இருக்கும்  ரமலான் மாதத்தில் திருக்குர்ஆனை படிக்கும் பொழுது ஒரு எழுத்திற்கு பல மடங்கு நன்மை என்பது தான் எதார்த்தம் ரமலான் மாதத்தில் நன்மைகளை குவிக்க விரும்புவோர் எதன் காரணத்தால் ரமலான் மாதத்தை இறைவன் சிறப்பித்து வைத்துள்ளானோ அந்த திருமறை குர்ஆனுடன் தொடர்புகளை அதிகபடுத்தி கொள்வது தான் மறுமை வெற்றிக்கு ஆசைபடும் மக்களின் செயலாக இருக்கும் وَمَا تَكُوْنُ فِىْ شَاْنٍ وَّمَا تَتْلُو

வேதமும் ரமலானும்

       வேதத்தை தூரமாக்கிய             இதயங்களுக்காக                  ****************            கட்டுரை எண் 1405                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= ரமலான் மாதம் சிறந்து விளங்க என்ன காரணம் ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் செய்யும் வியாபாரம் கூடுதல் இலாபம் தந்து விடுமா  ? மற்ற மாதங்களில் அடிக்கும் காற்றை விட மெல்லிய காற்று வீசுமா ? மற்ற மாதங்களை விட கூடுதலாக மழை பொழியுமா  ? மற்ற மாதங்களை விட சுற்று சூழல் அழகானதாக மாறி விடுமா? மற்ற மாதங்களை விட நேரத்தின் நிமிடங்கள் கூடி விடுமா ? நிச்சயமாக இல்லை ரமலான் மாதம் சிறப்பாக்கப்பட்ட ஒரே காரணம் புனித வேதத்தை வழங்க இறைவன் இந்த மாதத்தை தேர்வு செய்தது தான் மூல காரணம் ரமலானை வரவேற்க ஆவலாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் திருமறை குர்ஆனின் ஞானமும்  தொடர்பும் எந்தளவுக்கு உள்ளது  ? இறைவனின் வார்த்தைகளை அதன் மூல மொழியில்  பார்த்து படிக்க தெரிந்தவர்கள் எத்தனை  ? திரை இசை பாடல்களை அன்றாடம் ரசித்து கேட்ட அளவு இறைவனின் வேத வரிகளை முஸ்லிம்களின்  செவிகள் அன்றாடம்  ரசித்தது உண்டா