வேதமும் ரமலானும்
வேதத்தை தூரமாக்கிய
இதயங்களுக்காக
****************
கட்டுரை எண் 1405
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
ரமலான் மாதம் சிறந்து விளங்க என்ன காரணம்
ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் செய்யும் வியாபாரம் கூடுதல் இலாபம் தந்து விடுமா ?
மற்ற மாதங்களில் அடிக்கும் காற்றை விட மெல்லிய காற்று வீசுமா ?
மற்ற மாதங்களை விட கூடுதலாக மழை பொழியுமா ?
மற்ற மாதங்களை விட சுற்று சூழல் அழகானதாக மாறி விடுமா?
மற்ற மாதங்களை விட நேரத்தின் நிமிடங்கள் கூடி விடுமா ?
நிச்சயமாக இல்லை
ரமலான் மாதம் சிறப்பாக்கப்பட்ட ஒரே காரணம்
புனித வேதத்தை வழங்க இறைவன் இந்த மாதத்தை தேர்வு செய்தது தான் மூல காரணம்
ரமலானை வரவேற்க ஆவலாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் திருமறை குர்ஆனின் ஞானமும் தொடர்பும் எந்தளவுக்கு உள்ளது ?
இறைவனின் வார்த்தைகளை அதன் மூல மொழியில் பார்த்து படிக்க தெரிந்தவர்கள் எத்தனை ?
திரை இசை பாடல்களை அன்றாடம் ரசித்து கேட்ட அளவு இறைவனின் வேத வரிகளை முஸ்லிம்களின் செவிகள் அன்றாடம் ரசித்தது உண்டா ?
இவைகளில் கவனம் செலுத்தாது வருடா வருடம் ரமலான் மாதத்தை மட்டும் வரவேற்பதில் என்ன நன்மை ஏற்பட போகிறது ?
யாரை திருப்தி படுத்த போகிறது?
எதிர் வரும் (2021) ரமலான் மாதம் நம்மை விட்டு கடக்கும் போது குறைந்த பட்சம் திருக்குர்ஆனை பார்த்து படிக்கும் அளவுக்காவது முஸ்லிம்கள் ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்
பார்த்து படிக்க தெரிந்தோர் படிக்க தெரியாதவர்களுக்கு கற்று கொடுக்க தனது நேரத்தை ரமலான் மாதத்தில் செலவிட வேண்டும்
ரமலான் நேரங்களை முழுமையாக சொற்பொழிவுகளை கேட்பதில் கவனம் செலுத்துவது சஹ்ரு நேர தொலைகாட்சி நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது கஞ்சி காய்சுவதில் மும்முரமாக இருப்பது புத்தாடை எடுப்பதற்கு அதிக நாட்களை செலவிடுவது போன்றவைகளில் நாட்களை கழித்து விடாதீர்கள்
இறைவன் வழங்கிய வேதத்தை இதயத்தில் இருந்து தூரமாக வைத்து விட்டு வேதம் வழங்கப்பட்ட ரமலான் மாதத்தை மட்டும் ஆனந்தமாக வரவேற்பது முரண்பாடாகும்
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது
(அல்குர்ஆன் : 2:185)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment